
ஜெயலலிதா மறைவை அடுத்து, அதிமுக இரண்டாக பிளந்து, பல சிக்கல்களை உருவாக்கியது. அதன் பின்னர் OPS EPS ஒன்றாக இணைந்த பின்னர் டிடிவி தினகரனை கழட்டி விட்டனர்.
அதன்பின்னர், ஜெயா டிவி நிர்வாகம் விவேக் ஜெயராமனிடம் சென்றது. இந்த நிலையில் அதிமுகவிற்காக ஒரு அதிகார பூர்வ சேனலை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை ஏற்று துவக்கி வைக்க உள்ள தொலைக்காட்சி நியூஸ் ஜெ.
தமிழகத்தில் புதியதாக உதயமாக உள்ள நியூஸ் ஜெ சேனலின் துவக்க விழா, வரும் 14 ஆம் தேதி, நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற உள்ளது.அதற்கான அழைப்பிதழை தற்போது வெளியிட்டு உள்ளனர். அதில் கழக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
"எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காக இயங்கும்" என்ற புரட்சித்தலைவியின் வாக்குக்கு ஏற்ப தொண்டர்கள் அனைவரும் கை கோர்த்து விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைப்பெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, நியூஸ் ஜெ குழும மேனஜிங் டைரக்டர் சி.வி ராதா கிருஷ்ணன், துணைத்தலைவர் எஸ். தினேஷ்குமார், தொலைக்காட்சியின் மற்றொரு இயக்குனர் விவேக் அன்பரசன் மற்றும் ப்ரோகிராம் ஹெட் ஹன்சராஜ் சக்சேனா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ஏசியாநெட்டிடம் பேசிய நியூஸ் ஜெ மேனேஜிங் டைரக்டர் சி .வி ராதாகிருஷ்ணன், செய்தி ஒளிப்பரப்பு தொடர்பான,டெக்னிக்கல் விஷயங்கள் உலக தரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று, செய்திகளும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தரமான செய்திகளை மக்களுக்கு அளிப்பதே நியூஸ் ஜெ-வின் கொள்கை என்றும் தெரிவித்தார்.