’என்னது கோமளவள்ளி ஜெயலலிதா பெயரா? குட்டையைக் குழப்பும் டி.டி.வி.தினகரன்

Published : Nov 08, 2018, 11:51 AM IST
’என்னது கோமளவள்ளி ஜெயலலிதா பெயரா? குட்டையைக் குழப்பும் டி.டி.வி.தினகரன்

சுருக்கம்

‘ஜெயலலிதாவுக்கு கோமளவள்ளி என்ற பெயரே கிடையாது. அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறார்களா அல்லது இஷ்டத்துக்கு அடித்துவிடுகிறார்களா என்று கேள்வி எழுப்புகிறார் அ.ம.மு.க.கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.


‘ஜெயலலிதாவுக்கு கோமளவள்ளி என்ற பெயரே கிடையாது. அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறார்களா அல்லது இஷ்டத்துக்கு அடித்துவிடுகிறார்களா என்று கேள்வி எழுப்புகிறார் அ.ம.மு.க.கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்.

‘சர்கார்’ படம் குறித்த எண்ணிக்கையற்ற சர்ச்சைகளில் தற்போது முதலிடத்தில் இருப்பது அப்படத்தின் வில்லி கேரக்டருக்கு கோமளவள்ளி என்று ஜெயலலிதாவின் பழைய பெயரைச் சூட்டியிருப்பது. அந்த கேரக்டரை ஏற்றிருந்த வரலட்சுமி ஏறத்தாழ ஜெ’ போலவே சித்தரிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கோமளவள்ளி சர்ச்சை குறித்து இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த தினகரன், ‘அம்மாவுக்கு கோமளவள்ளி’ என்று ஒரு பெயரே கிடையாது. எதன் அடிப்படையில் அமைச்சர்கள் இப்படி கொதிக்கிறார்கள் என்றே புரியவில்லை’ என்கிறார்.

‘’2002 அல்லது 2003ல் காங்கிரசை சேர்ந்த ஒருவர், ஜெயலலிதாவை கோமளவள்ளி என கூறி விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவே என்னிடம், "ஏன் என்னைக் கோமளவள்ளி என்று சொல்கிறார்கள். நான் திரைப்படத்தில் கூட அப்படி ஒரு கதாப்பாத்திர பெயரில் நடிக்கவில்லையே, ஏன் இப்படி சொல்கிறார்கள்" என்று என்னிடம் கேட்டார். 

அமைச்சர்கள் படம் பார்த்துவிட்டு கருத்துக் கூறுகிறார்களா என்று தெரியவில்லை. நான் இன்னும் ‘சர்கார்’ படம் பார்க்கவில்லை. படத்தைப் பார்த்தபிறகு அதில் ஜெயலலிதாவுக்கு எதிராக காட்சிகள் வைத்திருந்தால் என்னுடைய எதிர்ப்பை கண்டிப்பாக பதிவு செய்வேன். அதுவரை எதுவும் சொல்லமுடியாது’ என்றார்.

ஆனால் விகிபீடியாவில் ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவள்ளி ஜெயராமன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு