கட்சியை வெச்சு செமத்தியாக கல்லா கட்டும் கமல்ஹாசன் !: மக்கள் நீதி மய்யமா? இல்ல, மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பிஸ்னஸா!?

By Vishnu PriyaFirst Published Nov 29, 2019, 6:44 PM IST
Highlights

நடிகராக இருந்த கமல்ஹாசனின் படங்கள் கலெக்‌ஷனை வாரி குவித்தனவோ இல்லையோ ஆனால் அரசியல்வாதி ஆகிவிட்ட கமலின் கட்சியோ செமத்தியாக கலெக்‌ஷனை அள்ளிக் குவிக்க துவங்கியிருக்கிறது! என்று தாறுமாறாக நம்மவரை கிண்டலடித்து விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நடிகராக இருந்த கமல்ஹாசனின் படங்கள் கலெக்‌ஷனை வாரி குவித்தனவோ இல்லையோ ஆனால் அரசியல்வாதி ஆகிவிட்ட கமலின் கட்சியோ செமத்தியாக கலெக்‌ஷனை அள்ளிக் குவிக்க துவங்கியிருக்கிறது! என்று தாறுமாறாக நம்மவரை கிண்டலடித்து விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏன்?........

எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வருகிறது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி. இதுவரையில் மாநில, மண்டல  மற்றும் மாவட்டத்தின் தலைமை பதவிகளில்தான் நபர்களை நியமித்திருந்தார் கமல். ஆனால், இந்த தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக இப்போது மாநிலம் முழுக்க வட்டங்கள், மாவட்டத்தின் பிற அணிகள் என எல்லாவற்றையும் ஏகபோகமாக நிரப்ப முடிவெடுத்து, ஆணைகளை பிறப்பித்துவிட்டார். 


மாவட்டம், வட்டம் அளவில் நிர்வாகிகளை நியமிக்க அவர் போட்டிருக்கும் ஐடியாதான் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை அதிர வைக்கிறது. ஏன் தெரியுமா?...கிட்டத்தட்ட மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பிஸ்னஸ் போன்ற யுக்தியை பயன்படுத்தியுள்ளார். அதன்படி, ஒவ்வொரு வட்டத்துக்கும் இருபது பேரை மய்யத்தில் சிறப்பு உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமாம். அவர்கள் ஒவ்வொரு நபரிடம் இருந்தும் தலைக்கு ஐநூறு ரூபாயை உறுப்பினர் கட்டணமாக் பெற வேண்டும். இப்படி சேரும் பத்தாயிரம் ரூபாயை மய்யத்தில் கட்ட வேண்டும். இப்ப, இந்த நபர் சேர்த்துவிட்ட இருபது நபர்களும் ஆளுக்கு இருபது பேரை சேர்க்க வேண்டுமாம். இப்படி செய்றதுல, யார் அதிக நபர்களை சேர்க்கிறாரோ அவர்தான் நகரம், ஒன்றியம் மாதிரியான பதவிகளில் உட்கார வைக்கப்படுவாராம்!


தலைமை வகுத்திருக்கும் இந்த தாறுமாறான ’வசூல் சட்டம்’ மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகளைக் கடுப்பாக்கி இருக்கிறது. ’ஏற்கனவே லோக்சபாவுக்கு பின் உங்க கட்சிக்கு மவுசு மடங்கிப்போச்சு!ன்னு கிண்டலடிக்கிறாங்க. இதுல இவரு வேற வசூல் திட்டத்தை போட்டு கட்சியை அசிங்கப்படுத்துறார்’ என புலம்புகின்றனர். 
ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படாமல், அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய கமல், தன் குடும்பத்தினர் எடுக்கும் ஆரத்தி தட்டின் முன் தலைகுனிந்து நிற்கிறார். 
ஓ இதன் பெயர்தான் பகுத்தறிவு பணிவா!?

click me!