அதிமுக, திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்... அறிக்கை விட்டு அலறவிடும் மக்கள் நீதி மய்யம்..!

By vinoth kumarFirst Published Nov 29, 2019, 5:37 PM IST
Highlights

3 ஆண்டுகளாக "புலி வருது புலி வருது" என்பது போல் அரசு தேர்தல் நடத்தபோவதாக அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்திற்கு போவதுமாக, ஒரு கண்ணாமூச்சு விளையாட்டே நடந்துக்கொண்டே இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

3 ஆண்டுகளாக "புலி வருது புலி வருது" என்பது போல் அரசு தேர்தல் நடத்தபோவதாக அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்திற்கு போவதுமாக, ஒரு கண்ணாமூச்சு விளையாட்டே நடந்துக்கொண்டே இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர்களின் ஒருவரான குமரவேல் விடுத்துள்ள அறிக்கையில் அதிமுக, திமுக, ஆகிய இரண்டு கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்று வரை நடத்தப்படாததால், மக்கள் அடிப்படை வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்ட கோரிக்கை வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆளும் கட்சியும் ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும், இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தங்கள் சுயநலம் வேண்டி உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறார்கள். 

3 ஆண்டுகளாக "புலி வருது புலி வருது" என்பது போல் அரசு தேர்தல் நடத்தபோவதாக அறிவிப்பதும், அதில் குறை இருப்பதாக எதிர்கட்சி நீதிமன்றத்திற்கு போவதுமாக, ஒரு கண்ணாமூச்சு விளையாட்டே நடந்துக்கொண்டே இருக்கிறது. ஒருபுறம் தேர்தல் நடத்தப்படுவதாக பாவனைக் காட்டி தனது கட்சிக் காரர்களிடம் விருப்பமனு பெறுவதும் மறுபுறம் தேர்தலுக்கு தடை போட மனுவோடு நீதிமன்ற வாசலில் நிற்பதும், இதுவரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த இவர்கள் தங்கள் கட்சிக்காரர்களையும் ஏமாற்ற துணிந்துவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. 

தமிழக மக்கள் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில், இவர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பதுதான் உள்ளாட்சி தேர்தல் என்கின்ற ஒன்றை நடப்பதற்கும், உண்மையான மக்களாட்சி உருவாவதற்கும் வழியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!