இன்று பதவியேற்கும் புதிய திமுக எம்எல்ஏக்கள் !!

Published : May 28, 2019, 07:10 AM IST
இன்று பதவியேற்கும் புதிய திமுக எம்எல்ஏக்கள் !!

சுருக்கம்

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற 22 தொகுதி இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் தனபால் அறையில் பதவி ஏற்றுக் கொள்ளிகின்றனர்.  

மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றிய அக்கூட் டணி, சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 இடங்களில் வெற்றிபெற்றது. 

மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய அதிமுக, சட்டமன்ற இடைத் தேர்தலில் 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி யைத் தக்க வைத்துக்கொண்டது.


இந்த சூழலில் புதிதாக வெற்றி பெற்றுள்ள திமுக எம்.எல்.ஏ.க்கள் 13 பேரும் இன்று பதவியேற்க உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இவர்கள் பதவியேற்கிறார்கள். 

இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.இதேபோல அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 9 எம்.எல்.ஏ.க்கள் வரும் 29ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். புதிதாக பொறுப்பேற்க உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனை வருக்கும் சபாநாயகர் தனபால் பதவியேற்பு பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இதனையடுத்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது வழக்கமான பணிகளை ஆரம்பிப்பர் என்று கூறப்படுகிறது.

ஆம்பூர்-வில்வநாதன், ஆண்டிப்பட்டி-மகாராஜன், அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி, குடியாத்தம்-காத்தவராயன், ஓசூர்-சத்யா, ஓட்டப்பிடாரம்-சண்முகையா, பெரம்பூர்-ஆர்.டி.சேகர், பெரியகுளம்-சரவணக்குமார், பூந்தமல்லி-கிருஷ்ணசாமி, தஞ்சாவூர்- நீலமேகம், திருப்பரங்குன்றம்-சரவணன், திருப்போரூர்-இதயவர்மன், திருவாரூர்-பூண்டி கலைவாணன் ஆகியோர் இன்று பதவி ஏற்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!