ராமதாஸை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.... பாத்தும் பாக்காமல் பதிலே சொல்லாமல் ஆஃப் லைன் போன பாமகவினர்!!

Published : Feb 19, 2019, 01:28 PM ISTUpdated : Feb 19, 2019, 01:41 PM IST
ராமதாஸை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்.... பாத்தும் பாக்காமல் பதிலே சொல்லாமல் ஆஃப் லைன் போன பாமகவினர்!!

சுருக்கம்

தேர்தல் வந்துவிட்டால் தனது யுக்தியையும் மாற்றிக் கொள்வார் ராமதாஸ் என்று தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். கூட்டணியே வைக்க மாட்டேன் என்று கூறி இன்று வைத்து இருப்பது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ளவா அல்லது  கட்சி காணாமல் போய்விடுமோ என்ற பயத்திலா? என எழுப்பியுள்ளனர். 

எனது குடும்பத்தில் யாரவது அரசியலுக்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள், வாய்ப்பு கிடைத்தால் தலித் ஒருவரையே முதல்வர் ஆக்குவோம், காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை, அதிமுக, திமுகவை வேரோடும், வேறடி மண்ணோடும் அழிக்கணும், ஒழிக்கணும்.

47 வருடங்களாக தமிழகத்தை பிடித்த சனியன்கள் இவர்கள். காமராஜர் வார்த்தையில் சொன்னால் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். காமராஜர் இரண்டு மட்டைகள் பற்றி சொன்னார். ஆனால், தற்போது நிறைய மட்டைகள் விழுந்துள்ளன. இந்த நாசகார சக்திகளை ஒழிக்க திட்டமிட்டு வருகிறோம்.

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அழுத்தம் திருத்தமாக அறிக்கை விட்டார் ராமதாஸ் இன்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது சமூக வலைதளங்களில் ராமதாஸின் பழைய டுவீட்களையும், அவர் பலமுறை சொன்னதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டு கலாய்த்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!