வீடியோ கான்ஃரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி… அசத்தும் செங்கோட்டையன் !!

Published : Sep 01, 2018, 08:56 PM ISTUpdated : Sep 09, 2018, 07:41 PM IST
வீடியோ கான்ஃரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு நீட் பயிற்சி…  அசத்தும் செங்கோட்டையன் !!

சுருக்கம்

வரும் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கபபட்டும் என்றும் இந்த மையங்களில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வை நுழையவிடாமல் பார்த்துக் கொண்டார். அவர் 2106 ஆண்டு மரணமடைந்த பிறகு தமிழகத்துக்குள் நீட் தேர்வு நுழைந்தது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தன, தமிழகத்தில் இருந்து போதுமான அளவு மாணவர்கள் தேர்வாகவில்லை. இந்நிலையில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் பின்புறம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ரூ.54.61 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பூமி பூஜையும்  நடைபெற்றது.

இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், அரசு நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக “டேப் மற்றும் டேட்டா” வழங்கப்படும் என தெரிவித்தார்.

வரும்  7-ந் தேதி தமிழகத்தில் 412 நீட் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதில் 3200 ஆசிரியர்-ஆசிரியைகள் பெற்று கற்றுக் கொடுப்பார்கள் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் , . மாணவ-மாணவிகளுக்கு காணொலி காட்சி மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படும் என்றார்..

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!