தைரியமாக தேர்வு எழுதுங்க.. 8 மாதத்திற்கு பிறகு நல்ல விடிவு காலம் பிறக்கும்.. சூசகமாக குட்நியூஸ் சொன்ன உதயநிதி

By vinoth kumarFirst Published Sep 12, 2020, 5:01 PM IST
Highlights

மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டதற்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பாஜகவும்,மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுமே காரணம் என குற்றம்சாட்டினார். 

மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலைக்கு அதிமுக மற்றும் பாஜக அரசுகளே காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதி ஸ்ரீதுர்கா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மதுரையில் நீட் தேர்வுக்கு பயந்து ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக் கொண்டதற்கு முழுக்க முழுக்க மத்தியில் ஆளும் பாஜகவும்,மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுமே காரணம் என குற்றம்சாட்டினார். கடந்த 4 ஆண்டுகளில் 10 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார். இல்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்  தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் , நாளை நடக்க உள்ள தேர்வை தைரியமாக சென்று எழுதுங்கள். 8 மாதத்திற்கு பிறகு மாணவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என கூறியுள்ளார். 8 மாதத்திற்கு பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெறும், நீட்டை தடை செய்யும் என்பதையே உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார்.

click me!