கல்வியை வியாபாரமாக்க தான் நீட் தேர்வு... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சனம்!!

Published : May 01, 2022, 03:33 PM IST
கல்வியை வியாபாரமாக்க தான் நீட் தேர்வு... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சனம்!!

சுருக்கம்

கல்வியை வியாபாரமாக்க தான் நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

கல்வியை வியாபாரமாக்க தான் நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில், திமுக மாணவர் அணியின் சார்பாக கல்வி, சமூகநீதி கூட்டாச்சித் தத்துவம் குறித்த தேசிய அளவிலான மாநாடு இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தின் முதல் உழைப்பாளி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நீட் தேர்வு உள்ளிட்ட எதை பற்றியும் காதில் வாங்கிக் கொள்ளாத ஒரு அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது. திரிபுராவில் 3 ஆயிரத்து 500 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 88 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 12 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 37 ஆயிரம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று முடிவுகள் வருகிறது. இதுப்போன்று மத்திய அரசே நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதை பலிபீடம் என சொல்கிறார். சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில மாணவர்கள் சிறைக்கு செல்கின்றனர். இலவச மருந்துவங்களை அளிப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால் தான் மருத்துவத்தை வியாபாரமாக்க வேண்டும் என்று தான் நீட்டை கொண்டு வர முற்படுகிறார்கள். நீட் வந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கல்வி என்பது சீரழிந்து விடும் என்று தெரிவித்தார். நீட் தேர்வால் இதுவரை பல உயிர்கள் பறிபோய் உள்ளன. இதை அடுத்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீட் விலக்கு குறித்த மசோதாவும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அதனை குடியரசு தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி, கல்வியை வியாபாரமாக்க தான் நீட் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என். நேரு தரப்பு திட்டம்..? அமலாக்கத்துறை பகீர் தகவல்..!
நீதித்துறையில் மணி மகுடம்..! 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளை முடித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்..!