அப்போதெல்லாம் வாயை மூடிட்டு இருந்துட்டு இப்போ நீலிக் கண்ணீர் வடிக்கும் அதிமுக.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

Published : Jun 20, 2021, 03:23 PM IST
அப்போதெல்லாம் வாயை மூடிட்டு இருந்துட்டு இப்போ நீலிக் கண்ணீர் வடிக்கும் அதிமுக.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சுருக்கம்

நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக ஆட்சியமைத்ததில் இருந்து செய்து வருகிறோம்.

தமிழக சட்டமன்ற தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்தபோது அதிமுக மவுனம் காத்தது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

சென்னை பெருங்குடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்ததுடன் அவர்களுக்கு அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- 2017ம் ஆண்டே நீட்தேர்வு கூடாது தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுங்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டினை தெரிவித்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றம் செய்து ஒருமித்த ஆதரவை அளித்தது திமுக தான். 

தொடர்ந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு கொண்டு போனதற்குப் பிறகு அதிமுகவை சேர்ந்த எந்த அமைச்சர்களும் குடியரசுத் தலைவரிடம் உட்கார்ந்து நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்கவில்லை. தமிழக சட்டமன்ற தீர்மானத்தை குடியரசுத் தலைவர் நிராகரித்தபோது அதிமுக மவுனம் காத்தது. ஆனால், இப்போது, நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். 

நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை திமுக ஆட்சியமைத்ததில் இருந்து செய்து வருகிறோம் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!