நீட் தேர்வு: கனவு கானல் நீராகி போய் விடுமோ.! அச்சத்தில் விக்னேஷ் தற்கொலை.! உதயநிதியை விரட்டிய பாமகவினர்..!

By T BalamurukanFirst Published Sep 11, 2020, 8:42 AM IST
Highlights

தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால் பா.ம.க.வினர் அவரை மாலை அணிவிக்க விடாமல் தடுத்து உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 


தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால் பா.ம.க.வினர் அவரை மாலை அணிவிக்க விடாமல் தடுத்து உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவர் ஆகும் கனவு பலிக்காது போகுமோ என்கிற அச்சத்தில் பெரும்பாலான மாணவர்கள் இருக்கிறார்கள்.அந்த வரிசையில் மனதை கட்டுப்படுத்த முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அப்படி தற்கொலை செய்தவர்கள் தான் அனிதா போன்றவர்கள் பட்டியலில் தற்போது விக்னேஷ் இடம்பெற்றுள்ளார்.

அரியலுார் மாவட்டம். இலந்தங்குழியைச் சேர்ந்தவர் மாணவர் விக்னேஷ்  2017ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் 1006 மதிப்பெண் பெற்றார். தன்னுடைய மருத்துவர் கனவிற்காக தொடர்ந்து தனியார் மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.

இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாததால் செப்.13ல் நீட் தேர்வை எழுத தயாராகி வந்தார். மிகுந்த மன உளைச்சலில் இருந்த விக்னேஷ்  கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால் பா.ம.க.வினர் மாலை அணிவிக்க விடாமல் தடுத்து உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். பின் விக்னேஷின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய உதயநிதி தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். பா.ம.க. சார்பில் 10 லட்சம், வி.சி.க. சார்பில் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.இறந்த மாணவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் பொது நிவாரண நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு அல்லது அரசு சார்ந்த பணி வழங்கப்படும்.பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மனநிலை தேவையறிந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!