நீட் தேர்வு: சட்டப்பேரவைக்குள் ஒரு பேச்சு.. வெளியே ஒரு பேச்சு.. நடிக்கும் அதிமுக.. திருமாவளவன் ஆவேசம்..!

Published : Sep 14, 2021, 09:20 PM IST
நீட் தேர்வு: சட்டப்பேரவைக்குள் ஒரு பேச்சு.. வெளியே ஒரு பேச்சு..  நடிக்கும் அதிமுக.. திருமாவளவன் ஆவேசம்..!

சுருக்கம்

சட்டப்பேரவைக்குள் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவளிப்பதாகத் தெரிவித்துவிட்டு வெளியில் அதிமுக நடிக்கிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.  

மதுரையில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட முன்வடிவு இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய துணிச்சலான முடிவாகும். இந்த மசோதாவைக் கொண்டுவந்த தமிழக முதல்வருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மன அழுத்தத்துக்கு ஆளான அரியலூர் மாணவி கனிமொழி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வால் இரண்டு இளம் உயிர்கள் காவு வாங்கப்பட்டுவிட்டன. இந்த நேரத்தில் மாணவச் செல்வங்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகக் கூடாது என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
மத்தியில் உள்ள மோடி அரசு இதுபோன்ற உயிர்களைக் காவு கொடுக்காமல் இருந்து, மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நீட் தேர்வைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுகொள்கிறேன். செப்டம்பர் 15 அன்று ஊபா போன்ற பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் காரைக்குடியில் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன்.
அண்ணாவின் பிறந்த நாளை ஆண்டுதோறும்  மாநில சுயாட்சி நாளாக கடைப்பிடிக்கிறோம். பெரியாரின் பிறந்த நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சமூக நீதி நாளுக்கான உறுதிமொழியை நாங்கள் ஏற்க உள்ளோம். திமுகவின் மசோதாக்கள் எல்லாமே தீர்மானமாகவே இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அண்ணாமலை திமுகவுக்கு எதிராகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு தமிழக மக்களுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவோம். வாய்ப்புள்ள இடங்களில் எங்கள் கட்சியினர் போட்டியிடுவார்கள். சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பதாகக் கூறும் அதிமுக வெளியே நடிக்கிறது. இது அவர்களுடைய இரட்டை வேடத்தைக் காட்டுகிறது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!