நீட்: இந்திய முழுவதும் ஒரே ரேசன் அட்டை போல் கல்வியை மாற்றுங்கள்.!இல்லையேல் மாநில கல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்.!

By T BalamurukanFirst Published Sep 13, 2020, 11:37 PM IST
Highlights

பெற்றோர்களின் டாக்டர் கனவை நிறைவேற்ற கடுமையாக முயற்சி செய்து படிக்கிறார்கள்.அந்த அளவிற்கு பெற்றோர்களும் கடன் வாங்கி சொத்தை விற்று பணத்தை நீட் கோச்சிங் சென்டர்களில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அதையெல்லாம் நினைக்கும் மாணவர்கள் தான் படித்த புத்தகத்தில் இருந்து வினாத்தாள் வராதது என்று நினைக்கும் போது தங்களின் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்த  நீட் தேர்வு தமிழக மாணவர்களின் உயிரை குடிக்கும் உயிர் கொல்லி என்று அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.தமிழகத்தின் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவராமல் சிபிஎஸ்சி கல்வி முறையில் நீட் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. இதற்காக மாணவர்கள் புதிதாக படிக்க வேண்டியது இருக்கிறது. நீட் கோச்சிங் சென்டர்கள் இதன் மூலம் கோடி கோடியாய் கொழிக்கிறார்கள்.கிராமப்புற மாணவர்கள் தமிழ் வழிக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாகவே அமைந்துள்ளது. தமிழக அரசு உறுதி தன்மையோடு மத்திய அரசிடம் சண்டையிடும் அளவிற்கு வலுஇல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.


நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரானது என்று போரட காரணமாக அமைந்துள்ளது. அனிதா தற்கொலையில் ஆரம்பித்து விக்னேஷ் மற்றும் மதுரை மாணவி வரைக்கும் உயிரை மாய்த்திருக்கிறார்கள். இன்னும் 8மாதங்கள் பொறுத்திருங்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.இல்லை இல்லை இது உச்சநீதிமன்றம் தீர்ப்பு எனவே அந்த தீர்ப்பை அவமதிப்பதாக ஸ்டாலின் பேச்சு அமைந்திருக்கிறது என்கிறார் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு,13.09.2020 மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தோ்வு 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.  தமிழகத்தில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.


 
இந்த நிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில்,

"2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும். மதிய உணவு இல்லை. தமிழ் அறிவிப்பு இல்லை. கையுறைகூட குறிப்பிட்ட நிறத்தில். வெயிலில் பெற்றோர்-கழிப்பறை வசதியில்லை. நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம்" என பதிவிட்டுள்ளார்.

தமிழக மாணவர்கள் எதை சந்திக்கும் மாணவர்கள் தான்.ஆனால் தன் பெற்றோர்களின் டாக்டர் கனவை நிறைவேற்ற கடுமையாக முயற்சி செய்து படிக்கிறார்கள்.அந்த அளவிற்கு பெற்றோர்களும் கடன் வாங்கி சொத்தை விற்று பணத்தை நீட் கோச்சிங் சென்டர்களில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். அதையெல்லாம் நினைக்கும் மாணவர்கள் தான் படித்த புத்தகத்தில் இருந்து வினாத்தாள் வராதது என்று நினைக்கும் போது தங்களின் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள்.


ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதும் ஒரே ரேசன் அட்டையை கொண்டு வந்தது போல் கல்வி முறையையும் அதே போன்று மாற்றுங்கள். இல்லையெனில் அந்தந்த மாநில மொழிக்கல்வி முறையில் நீட் தேர்வை நடத்துங்கள். அதைவிடுத்து மாணவர்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்று பெற்றோர்கள் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
 

click me!