தமிழக நிர்வாகத்தை நடத்த மாற்று ஏற்பாடு தேவை: 'இந்து' ராம் பரபரப்பு பேட்டி

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 05:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
தமிழக நிர்வாகத்தை நடத்த மாற்று ஏற்பாடு தேவை: 'இந்து' ராம் பரபரப்பு பேட்டி

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசை வழிநடத்த மாற்று ஏற்பாடு அவசியம் என்று மூத்த பத்திரிக்கையாளரான இந்து என்.ராம் வலியுறுத்தி உள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தெளிவான அறிக்கைகள் வந்திருக்க வேண்டும் என்று பிபிசி தமிழோசை வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில் இந்து ராம் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தெளிவான அறிக்கைகள் வந்திருக்க வேண்டும் என்றும், முதலில் வெளிவந்த மருத்துவ அறிக்கைகளில் எந்தவித தகவலும் இல்லை என்று 'இந்து' ராம் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து என தவறான தகவல்களைத்தான் தெரிவவித்தனர்.

ஆனால், தற்போது வரும் மருத்துவ அறிக்கைகளில் பல விஷயங்கள் சொல்லப்படுவதாகவும் இந்து ராம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா கிரிட்டிகல் கேரில் அனுமதிக்கப்பட்டு மெல்ல மெல்ல குணமாகி வருவது தெரிகிறது என்றாலும் இதனை முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போது தமிழக அரசாங்கத்தைப் பொறுத்தவரை செயல்படவே இல்லை என் கூறிய இந்து ராம், அதிகாரிகள்தான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிருப்பதாகவும் பேட்டி அளித்துள்ளார்.

அமைச்சர்கள் தங்களது பணிகளை செய்வது இல்லை எனவும் அவர் கூறினார். அமைச்சர்கள் பணிகளை செய்யக்கூடாது என்ற நோக்கம் எதுவும் இல்லை என்று கூறிய அவர், அவர்களால் செய்ய முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இந்து ராம் குற்றம் சாட்டினார். அமைச்சர்களுக்கு முடிவெடுக்கும் தைரியம் எதுவும் இல்லை எனவும், அனைத்து அதிகாரங்களும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தை நடத்த முடியாத நிலையில் நிச்சயமாக ஒரு மாற்று ஏற்பாடு தேவை. இதன் காரணமாகத்தான் ஆளுநர் நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. 

அரசியல் சாசனப்படி பிரதமரோ அல்லது முதலமைச்சரோ செயல்பட முடியாத நிலையில் இருக்கும்போது மாற்று ஏற்பாடுகள் அவசியம் என்று கூறிய இந்து ராம், தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

அதேபோல், பிரதமரோ முதலமைச்சரோ ஒரு அரசாங்கத்தை வழிநடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் தேவை. ஆனால் தலைமைச் செயலரோ, உள்துறை செயலரோ அரசாங்கத்தை நடத்தக் கூடாது என்றும் அவர் கூறினார்.

அது மட்டுமல்லாமல் அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் அரசாங்கத்தை நடத்தக் கூடாது என்ற அவர், முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றபோது, அப்போதைய ஆளுநர் சரியான நடவடிக்கையை மேற்கொண்டார். அவருக்கு முன்புக அண்ணாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது நெடுஞ்செழியன் அரசாங்கத்துக்கு தலைமை வகித்தார்.

இன்றைக்கும் அதுபோன்ற நிலைமை தேவை என்றும் இந்து ராம் பிபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!