முதல்வர் ஜெ. நலம்பெற வேண்டி அண்ணா தொழிற்சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை...

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 05:31 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
முதல்வர் ஜெ. நலம்பெற வேண்டி அண்ணா தொழிற்சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை...

சுருக்கம்

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் வரும் நிலையில், அவர் பூரண நலத்துடன் உடல்நலம் தேறி மீண்டும் பணியாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் உள்ளிட்ட பலர் பல்வேறு இடங்களில் பூஜைகள், யாகங்கள் உள்ளிட்டவைகளில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்ச ஜெயலலிதா விரைவில் குணம்பெற்று, மீண்டும் பணியாற்ற வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நேர்த்திக்கடன் செய்தும், யாகம் வளர்த்தும் வேண்டி வருகின்றனர்.

மண்சோறு சாப்பிடுவது, அங்க பிரதட்சணம் செய்வது, அலகு குத்துவது உள்ளிட்ட நேர்த்திக்கடன்களும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சர்வமத கூட்டு பிரார்த்தனையை நடத்தினர்.

இந்த கூட்டு பிரார்த்தனையில், மதுரை மண்டலம் மற்றும் கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அண்ணா தொரிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!