சட்டம் ஒழுங்கெல்லாம் சரியாகத்தான் இருக்கு உமது வேலையை பாரும் - சுப்ரமணிய சுவாமிக்கு டி.ராஜா சூடு

Asianet News Tamil  
Published : Oct 10, 2016, 05:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
சட்டம் ஒழுங்கெல்லாம் சரியாகத்தான் இருக்கு உமது வேலையை பாரும் - சுப்ரமணிய சுவாமிக்கு டி.ராஜா சூடு

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17 நாட்கள்  கடந்த நிலையில் அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

முதலமைச்சர் உடல் நலம் பெற வேண்டும் என அனைவரும் பேசி வாழ்த்துக்களை தெரிவித்து வரும் வேலையில் ஒரே ஒரு நபர் சுப்ரமணியம் சாமி மட்டும் தொடர்ந்து முதல்வர் உடல்நிலை குறித்தும் , தமிழக அரசியல் சூழல் குறித்தும் எதிர்கருத்துக்களை கூறி வருகிறார். 

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து பேசிவருகிறார். சுப்ரமணியம் சுவாமியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,சென்னை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சுப்ரமணியம் சுவாமி கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். உங்கள் வேலையை பாருங்கள் சட்டம் ஒழுங்கு சரியாகத்தானிருக்கு என்று சுப்ரமணியம் சுவாமிக்கு பதிலடி கொடுத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா  செய்தியாளார்களுக்கு டி.ராஜா அளித்த பதில் :

அப்பலோமருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அதிமுக நிர்வாகிகளான தம்பிதுரை், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஒருவரிடமும்  கேட்டறிந்தேன். 

முதல்வர் உடல்நிலை தேறிவருவதாக கூறினார்கள். அவர் விரைவில் குணமடைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தான் சார்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

சுப்பிரமணியசாமி கூறுவது போல் குடியரசுதலைவர் ஆட்சி என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கீழ்த்தரமான அரசியலாகும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

AIADMK Rift: மன்னிப்பு கடிதம் வழங்கிய எஸ்.பி.வேலுமணி தரப்பு.. சிவி சண்முகம் மிஸ்சிங்
TN Govt Scheme: தங்கைகளுக்கு கிடைக்கப்போகும் 8 கிராம் தங்கமும், பட்டுப்புடவையும்.! ஜூன் மாதம் முதல் அண்ணன் சீர் திட்டம் நடைமுறை?!