50 தொகுதிகள் வேண்டும்..! கடிதம் கொடுத்த ராகுல் காந்தி..! திமுகவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்த காங்கிரஸ்..!

By Selva KathirFirst Published Feb 26, 2021, 11:29 AM IST
Highlights

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் தங்களுக்கு 50 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரடியாக மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் தங்களுக்கு 50 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரடியாக மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுநாள் வரை கூட்டணி கட்சிகளை திமுக தலைமை லெப்ட் ஹேண்டில் டீல் செய்து வந்தது என்றே கூறலாம். அதிலும் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையின் போது அவர்கள் கேட்ட தொகுதிகளில் பாதியை கூட தர இயலாது என்று திமுக தலைமை கறார் காட்டி வந்தது. இவை அனைத்துமே திரை மறைவில் ரகசியமாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை. ஆனால் நேரடி பேச்சுவார்த்தையின் போது திமுகவை காங்கிரஸ் கட்சி லெப்ட் ஹேண்டில் டீல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் யாரும் எதிர்பாராத வகையில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்ணா அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்தது தான் இதில் ஹைலைட். துரைமுருகன் போன்றவர்கள் கிண்டலாக பேசுவதை தடுக்கவே உம்மன் சாண்டியை அனுப்பியதாக கூறுகிறார்கள். கேரள முன்னாள் முதலமைச்சர், அம்மாநிலத்தில் மதிக்கப்படும் தலைவர்களில் மிக முக்கியமானவர் என்பதால் அவரை காங்கிரஸ் கட்சி அறிவாலயம் அனுப்பியுள்ளது. இவர் போன்ற தலைவரை அனுப்பியும் திமுக 20 சீட், 21 சீட் என்றால் எப்படி என்பதை எடுத்துரைக்கவே இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

அதோடு மிக முக்கியமாக ராகுல் காந்தி மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் ஒன்றை தினேஷ் குண்டுராவ் கையோடு கொண்டு வந்திருந்தார். அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஏன் 50 தொகுதிகளை திமுக ஒதுக்க வேண்டும் என்பதற்கான காரணம் பட்டியலிடப்பட்டிருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் கிடைத்தால் என்ன நேரும் என்பதை காங்கிரஸ் திமுக நிர்வாகிகளிடம் அதிரடியாகவே எடுத்துரைத்தாக கூறுகிறார்கள். பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலோ அல்லது பெரும்பான்மை சற்று அதிகம் இருந்தாலோ திமுக ஆட்சி அமைத்தாலும் அதனை பாஜக எப்படியும் கவிழ்த்துவிடும் என்று காங்கிரஸ் எடுத்துக்கூறியுள்ளது.

மேலும் மத்திய பிரதேசத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முறை ராஜஸ்தானில் செல்லுபடியாகவில்லை . இதற்கு காரணம் ராகுல் காந்தி. எனவே தமிழகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க ராகுலின் ஆதரவு தேவை என்பதை பக்குவமாக காங்கிரஸ் தரப்பு திமுக மேலிடத்திடம் எடுத்துக்கூறியுள்ளது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை தொகுதிப்ப ங்கீடு பக்கம் திரும்பியுள்ளது. ஆனால் திமுக தரப்போ தலைவரிடம் கலந்து பேசிவிட்டு மறுபடியும் பேசலாம் என்று ஜகா வாங்கியுள்ளது. ஆக முதல் சுற்று பேச்சில் காங்கிரஸ் கை ஓங்கியுள்ளது. அதிலும் ராகுல் காந்தி ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் திமுக தலைமையை யோசிக்க வைத்துள்ளது.

click me!