மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மகள் நேத்ரா ஏழைகளுக்கான நல்லெண்ணெ தூதர்.. அறிவித்தது ஐநா சபை.!!

By T BalamurukanFirst Published Jun 5, 2020, 10:29 AM IST
Highlights

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்துள்ளது ஐ.நா சபை.

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளி மகளை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக அறிவித்துள்ளது ஐ.நா சபை.
கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது மதுரை மேலமடைப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளிகளுக்கு உணவு பொருள்களை வழங்கினார் மோகன்.இவர் தன் மகள் நேத்ரா படிப்புக்காக வைத்திருந்த பணத்தை எடுத்து ஏழைகளுக்கு உதவி செய்தார் என்பது தான் ஹிட்டான செய்தி. இதையறிந்த நடிகர் பார்த்திபன் நேத்ரா படிப்புக்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி "மான்கி பாத்" நிகழ்ச்சியில் மதுரை முடிதிருத்தும் தொழிலாளி மோகன் குடும்பத்தாரை மனதார பாராட்டினார். அன்றைய தினமே மோகன் குடும்பத்தினர் பாஜகவில் சேர்ந்ததாக செய்திகள் வெளியானது.அடுத்தநாள் அதை மறுத்தார் மோகன்.

இப்படியான சூழ்நிலையில்,பிரதமர் மோடி இவரை பாராட்டி பேசிய நிலையில், இவருக்கு மக்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது. இந்நிலையில், தற்போது, மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி மோகனின் மகள் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை அறிவித்ததுள்ளது. மேலும் இவருக்கு, ஊக்கத் தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது . 

click me!