ஸ்டாலினின் ஒன்றிணைவோம் வா திட்டத்தால் கொரோனா வந்து உயிருக்கு போராடுகிறாரா ஜெ.அன்பழகன்?

By Monica PriyadarshiniFirst Published Jun 5, 2020, 10:18 AM IST
Highlights

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த ஒன்றினைவோம் வா திட்டத்தை செயல்படுத்த அழைந்து திரிந்த காரணத்தினால் தான் அக்கட்சி எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த ஒன்றினைவோம் வா திட்டத்தை செயல்படுத்த அழைந்து திரிந்த காரணத்தினால் தான் அக்கட்சி எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

திமுகவின் சென்னை நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவர் அன்பழகன். கலைஞர் இருந்த வரை சென்னையில் அவருக்கு போர்ப்படைத் தளபதி ஜெ.அன்பழகன் தான். கலைஞர் புள்ளி வைத்தால் போதும் அன்பழகன் கோலம் போட்டு ஒரு காட்டு காட்டிவிடுவார். ஆனால் துவக்கம் முதலே அன்பழகன் – ஸ்டாலின் இடையே பெரிய அன்டர்ஸ்டான்டிங் கிடையாது. இதற்கு காரணம் அன்பழகன் கனிமொழியுடன் நெருக்கம் காட்டி வந்தது தான். மேலும் கலைஞர் மனதில் அன்பழகனுக்கு என்று தனியான இடம் இருந்தது.

இதனை பயன்படுத்திக் கொண்டு சென்னையில் அன்பழகன் ஸ்டாலின் விருப்பதை மீறி அரசியல் செய்து வந்ததாகவும் பேச்சு உண்டு. இதனால் தான் நல்ல பேச்சாற்றல் மற்றும் எதிர்கட்சியினரை அரள வைக்கும் ஆற்றல் கொண்டவராக இருந்தாலும் அன்பழகனை சட்டப்பேரவையில் கடைசி இருக்கையில் அமர வைத்தார் ஸ்டாலின். ஆனால் கலைஞர் மரணத்திற்கு பிறகு காட்சிகள் மாறின. ஸ்டாலினுடன் யாரும் எதிர்பாராத வகையில் அன்பழகன் நெருக்கம் ஆனார்.

சென்னையை பொருத்ததவரை சேகர்பாபு, அன்பழகன் ஆகிய இரண்டு பேரைத்தான் ஸ்டாலின் பெரிதாக நம்பி வந்தார். இதனால் சென்னை திமுகவில் அன்பழகன் அசைக்க முடியாத ஒரு நபராகினார். இந்த நிலையில் தான் தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிருக்கு போராடி வருகிறார் அன்பழகன். அன்பழகனுக்கான இந்த நிலை என்று மாற்றுக்கட்சியினர் கூட உச் கொட்டும் வகையில் செயல்படக்கூடியவர் அன்பழகன். யாரும் உதவி என்று சென்றால் மறுக்காமல் செய்து கொடுக்க கூடியவர்.

தன்னுடைய தொகுதி, வேறு தொகுதி என்றெல்லாம் பார்க்காதவர். திமுகவினருக்கு ஒரு கஷ்டம் என்றால் முதல் ஆளாக வந்து நிற்க கூடியவர். அப்படிப்பட்டவர் கொரோனாவுக்கு ஆளாகி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இதற்கு காரணம் ஒன்றினைவோம் வா திட்டத்தின் கீழ் உதவிகளை செய்யும் போது அவருக்கு தொற்று ஏற்பட்டது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. ஸ்டாலின் ஒன்றினைவோம் வா என நிர்வாகிகளை செயல்பட வைத்ததால் ஏற்பட்ட விளைவு என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

 

ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. கொரோனா சென்னையில் தீவிரம் காட்டத் தொடங்கியது முதலே அன்பழகன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் ஸ்டாலினின் ஒன்றினைவோம் வா திட்டத்தில் கூட அன்பழகன் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கட்சி நிர்வாகிகளிடம் தேவையானதை கொடுத்து அவர்களையே நலத்திட்ட உதவிகளை பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.

வீட்டிலேயே இருந்தாலும் கட்சியினர் அடிக்கடி வந்து அவரை சந்தித்து சென்றுள்ளனர். இப்படி வந்த கட்சி நிர்வாகிகள் மூலமாகத்தான் அன்பழகனுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கல்லீரல் பிரச்சனை, சிறுநீரக கோளாறு போன்றவற்றுடன் கொரோனாவும் சேர்ந்து கொண்டதால் தான் அன்பழகன் மூச்சுவிட சிரமப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். மற்றபடி ஸ்டாலினின் ஒன்றினைவோம் வா தான் அன்பழகன் உயிருக்கு போராட காரணம் என்பதெல்லாம் தவறான தகவல் என்று அவரது குடும்பத்தினரே கூறுகின்றனர்.

click me!