தேசிய கடல் மீன்வள மசோதா. அமைச்சர் எல்.முருகன் எங்களே அழைத்து பேச வேண்டும்.. கொந்தளிக்கும் மீனவர்கள்.

Published : Jul 19, 2021, 03:58 PM IST
தேசிய கடல் மீன்வள மசோதா. அமைச்சர் எல்.முருகன் எங்களே அழைத்து பேச வேண்டும்.. கொந்தளிக்கும் மீனவர்கள்.

சுருக்கம்

தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் இன்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. 

தேசிய கடல்  மீன்வள மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் மீனவ சங்கங்களின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும், இந்த மசோதா குறித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சங்கங்களிடமும் மத்திய அரசு கருத்து கேட்க வேண்டும் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்  மீனவர்களை அழைத்து பேச வேண்டும் என தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவை கண்டித்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் இன்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொண்டு  மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் கோஷி மணி, மீனவ மக்களளை பெறுத்தவரை மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா ஒரு கருப்பு சட்டமாக கருதப்படுகிறது. 

இச்சட்டம், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மீனவ மக்களுக்கு எதிராக உள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் இரண்டு நாட்களாக கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்னர். மேலும் இந்த மசோதா குறித்து மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை அழைத்து பேச வேண்டும் என்றும் அச்சங்கம்  சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மசோதாவிற்கு எதிராக காசிமேடு துறைமுகத்தில் உள்ள அனைத்து படகுகளிலும் கருப்பு கொடி பறக்கவிடபட்டது குறிப்பிடதக்கது.
 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!