சதி, மோசடியில் ஈடுபடும் சோனியா… ராகுல்… சுனா சாமி பரபரப்பு வாக்குமூலம்!

Published : Sep 18, 2018, 11:34 AM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
சதி, மோசடியில் ஈடுபடும் சோனியா… ராகுல்… சுனா சாமி பரபரப்பு வாக்குமூலம்!

சுருக்கம்

நேஷனல் ஹெரால்டு முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர், பல்வேறு சதி, மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கை, சுப்பிரமணியன் சாமி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி சமர் விஷால் முன்பு வந்தது. அப்போது, கோர்ட்டில் ஆஜரான சுப்பிரமணியன் சாமி, யங் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் ராகுலுக்கும், சோனியாவுக்கும் சொந்தமாக உள்ளன. அந்த நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் முழுவதும் அவர்களிடமே உள்ளன. 

இதனை பயன்படுத்தி அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை முறைகேடாக இருவரும் அபகரித்துள்ளனர். இதற்காக இருவரும் பல்வேறு சதி, மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என வாக்குமூலம் அளித்தனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்