
சசிகலாவின் தீவிர அதரவு பட்டியலில் இருக்கும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா இல்லாத இந்த நிலையில் தேர்தலில் நின்றால் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அதிரடியாக கூறியுள்ளார்.
தனது சொந்த ஊரான நத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நத்தம் விஸ்வநாதன் சசிகலா குடும்பத்திற்கு எதிராக அதிரடி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
பி.எச் பாண்டியன், மனோஜ் பாண்டியன் சென்னையில் பேட்டி கொடுத்து அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில் நத்தம் விஸ்வநாதனும் பல புதிய தகவல்களை கூறியிருப்பதால் பரபரபப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் செல்வாக்கால் மட்டுமே ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற முடிந்தது.
கொஞ்சம் கூட மக்கள் செல்வாக்கு இல்லாதவர் சசிகலா என நத்தம் தெரிவித்தார்.
மிரட்டப்பட்டு உடன் வைக்கபட்டிருக்கும் 121 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இந்த 121 எம்.எல்.ஏக்களும் வெகு விரைவில் ஓ.பி.எஸ்ஸிடம் வந்து சேருவார்கள் என தெரிவித்தார். அதற்கு அவர் சொல்லும் காரணம் தான் பகீர் ரகம்.
அதாவது 121 எம்.எல்.ஏக்களிடமும் சசிகலா குடும்பத்தினர் அத்துமீறி நடந்து கொள்வார்கள். அதை தாக்கு பிடிக்க முடியாமல் எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் சாய்வது நிச்சயம் என்றார் நத்தம் விஸ்வநாதன்.
நத்தம் விஸ்வநாதன் இப்படி கூறினாலும் ஓ.பி.எஸ் வசம் ஏற்கனவே உள்ள 10 எம்.எல்.ஏக்களையும் தங்கள் பக்கம் இழுக்க அனைத்து உள்ளடி வேலைகளையும் சைலண்ட்டாக செய்து வருகிறார் டி.டி.வி.தினகரன்.
யார் யாரை தூக்குகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.