
சசிகலா தரப்புக்கு என்ன தேவையோ அதை கொடுத்து அனுப்பி விடுங்கள் அவர்களை கூடவே வைத்திருக்க வேண்டாம் என்று தான் சொன்னபோது ஜெயலலிதா அதை கேட்டிருந்தால் இன்று அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என வழக்கறிஞர் ஜோதி தெரிவித்தார்.
அதிமுக வின் சட்ட ஆலோசகராக இருந்தவர் ஜோதி. ஜெயலலிதா தொடர்பான வழக்குகள்,தமிழக அரசின் வழக்குகள் ஆகியவற்றை கையாண்டு வந்த இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அதிமுக வில் இருந்து விலகி திமுக வில் இணைந்தார்.
தற்போது அவர் திமுக வில் இருந்து விலகி, அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ் அணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார்.
கட்சியில் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டாலும் அவர் அதற்கு முன்பு உறுப்பினராக இருந்த நாட்களின் எண்ணிக்கை ஒழுங்கு நடவடிக்கையின் போது காலாவதியாகி விடும். என அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
அதன் பிறகு அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகள் கழித்துதான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். எனவே இப்போதைய அவரது நியமனமும், அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாது என ஜோதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதே நேரத்தில் தண்டனை குற்றவாளிகள் கட்சியில் பொறுப்புக்கு வர முடியாது என்று அதிமுகவில் சட்ட விதிகளில் இல்லை என்று தெரிவித்த ஜோதி
தேர்தல் ஆணையம் குற்றவாளிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்து கட்சி நடத்துவதை வேடிக்கை பார்க்கிறது என குற்றம் சாட்டினார்.
இதே போன்று உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் சின்னம் பெறுவதற்காக தரப்படும் ‘பி பார்ம்’களில் சசிகலா கையெழுத்திட்டால் அது சட்டப்படி செல்லாது என்றும் அதை எதிர்த்து முறையிட்டால் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் ஒதுக்கி இருந்தாலும் அது ரத்தாக வாய்ப்பிருக்கிறது என்றும் ஜோதி தெரிவித்தார்.
தான் அதிமுகவில் இருந்தபோது ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்தது சசிகலா தரப்புக்கு பிடிக்கவில்லை என தெரிவித்தார்.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா எனக்கு முக்கியத்துவம் அளித்தது சசிகலா தரப்புக்கு பிடிக்கவில்லை என தெரிவித்தார்.
சசிகலா தரப்புக்கு என்ன தேவையோ அதை கொடுத்து அனுப்பி விடுங்கள் அவர்களை கூடவே வைத்திருக்க வேண்டாம் என்று தான் சொன்னபோது ஜெயலலிதா அதை கேட்டிருந்தால் இன்று அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது என வழக்கறிஞர் ஜோதி தெரிவித்தார்.