ஜெயலலிதாவின் ராஜகுருவான நடராஜன்... திமுக ஜெ.வுடன் போராடி தோற்கடித்த கதை!

 
Published : Mar 20, 2018, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
ஜெயலலிதாவின் ராஜகுருவான நடராஜன்...  திமுக ஜெ.வுடன் போராடி தோற்கடித்த கதை!

சுருக்கம்

Natarajan turn into political Raja guru for Jayalalithaa

தமிழக அரசியலில் மறுக்க  முடியாத வார்த்தை இது. அ.தி.மு.க. எனும் மிகப்பெரிய ஆளுமை இயக்கத்தின் நிழல் தலைவராக வாழ்ந்த மனிதர் தான் எம்.என். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முப்பெரும் ஜாம்பவான்களுடன்  அரசியல் செய்து பழகியவர். ஆனால் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அரசியலில் பெரிய தலைக்கட்டாக உருவெடுக்கவும், அ.தி.மு.க.வை கைப்பற்றிடவும், முதல்வராக தனிப்பெரும் ஆளுமை காட்டிடவும் நடராஜனின் சாணக்கியத்தனங்கள் பெரிதும் கைகொடுத்தன என்பார்கள் தமிழக உள் அரசியலை அறிந்தவர்கள். 

எம்.என் என்ற ஒரு மா..மனிதர் இல்லையென்றால் அயன் லேடி என்ற ஜெயலலிதா எனும் மாபெரும் ஆளுமை பத்தோடு பதினொன்றாக காணாமல் போயிருந்திருக்கலாம்..   நடராஜன் மட்டும் 1989-ம் ஆண்டு தமிழக அரசியலில் ஒரு ஒரு மாபெரும் ஆளுமையை கொடுக்க போராடினார். அந்த சாணக்கிய தனம் இன்றளவும் யாரும் செய்ததில்லை. அப்படி ஒரு திள்ளலஅங்காடி வேலையென சொல்லலாம்.

1989-ம் ஆண்டு திமுக ஆட்சி நடைபெற்றது. அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள், என்னதான் அதிமுகவின் அணிகள் இணைந்தாலும் திமுகவை ஒன்னும் செய்யமுடியாது என உணர்ந்த ஜெ. இதே மார்ச் 15-ந் தேதி ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார். அது என்னன்னா? அரசியலைவிட்டே அரசியலைவிட்டு விலகி ஹைதராபாத்தில் செட்டிலாவது என்பதுதான். 

இதற்காக தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதினார். இந்த கடிதத்தையும் அதன் நகல்களையும் சபாநாயகரிடமும் பத்திரிகைகளிடமும் ஒப்படைக்கச் சொல்லி கார் ஓட்டுநரிடம் கொடுத்து விட்டு மறுநாள் பத்திரிகைகளில் தமது ராஜினாமா கடிதம் வரவில்லை என்பதை அறிந்து பதறுகிறார் ஜெயலலிதா. கடிதம் கொடுத்துவிட்ட ஓட்டுநரை விசாரிக்கிறார் ஜெ. அவரோ என்னிடமிருந்த கடிதத்தை சிலர் தாக்கிவிட்டு பறித்து சென்றுவிட்டனர் என சொல்ல அப்போதுதான் புரிகிறது, இது நடராஜனின் வேலை என...  போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை கண்காணிக்க உளவாளி வைத்திருந்தார் நடராஜன். அந்த உளவாளிகள் மூலமாக ஜெயலலிதா ஏதோ சில கடிதங்கள் கொடுத்துவிடுகிறார் என்பதை தெரிந்து கொண்ட நடராஜன். தமிழக அரசியலில் தாம் சாதிக்க போட்ட திட்டத்தை குழி தோண்டி புதைக்கிறாரே ஜெயலலிதா என பதறியடித்து அடியாட்களை ஏவி விட்டு ஜெ.வின் ஓட்டுநரிடம் இருந்து கடிதங்களை பறித்து வீட்டு பீரோவில் பதுக்கி வைத்தார் நடராஜன். 



நடராஜனின் இந்த செயலால் கொதித்து போன ஜெயலலிதா அவரது வீட்டுக்கு போய் கோபமாக சண்டை போடுகிறார். ஆனால் நடராஜன் ஜெயலலிதாவை சமாதனபடுத்தி அனுப்பிவிட்டார். எப்படியோ இந்த மோதல் கருணாநிதியின் கவனத்துக்குப் போகவே, நடராஜனிடமிருந்து ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதங்களை கைப்பற்றி  அம்பலமாக்கினார். 

அன்று தான் கிடைத்தது திமுகவிற்கு சரியான பலமான ஒரு எதிரி... தமக்கு ஆலோசகராக இருந்த நடராஜனை எப்படி கைது செய்யலாம்? என்ன ஆனாலும் சரி பார்த்துவிடலாம் என ஜெயலலிதா அரசியலிலிருந்து விலகும் முடிவை கைவிட்டார். நடராஜனின் இந்த சானக்கியத்தனத்தால் ஜெயலலிதாவின் அதிதீவிர நம்பிக்கையாளராக நடராஜன் உருவெடுத்தார்.

கைது வரை வெறும் நிழல் உலக அரசியல் ஆலோசகராக இருந்து வந்த நடராஜன் ராஜகுருவாக மாறினார்.  நாளுக்கு நாள் ஜெயலலிதாவை தமிழகத்தின் மாபெரும் சக்தியாக மாற்றினார். எம்.ஜி.ஆர் இருந்தபோது கூட இப்படி ஒரு சரிவை சந்திக்காத திமுக ஜெயலலிதாவுடன் போராடி தோற்ற கதைகளும் அரங்கேறின.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!
பாஜகவை வைத்து தவெகவுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்..! திமுகவை பேயடி அடித்த விஜய்..! சீக்ரெட் பின்னணி..!