"இவ்வளவு சிக்கலுக்கும் நடராஜனும் தினகரனும்தான் காரணம்": வழக்கறிஞர்களிடம் கொட்டி தீர்த்த சசிகலா

First Published May 5, 2017, 10:11 AM IST
Highlights
natarajan and dinakaran are the reason for all troubles says sasikala


சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் சார்பில், தண்டனையில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்காக, சில விளக்கங்களை பெறுவதற்காகவும், அவர்களுடைய கையெழுத்தை பெறுவதற்காகவும், சிறையில் உள்ள  சசிகலா உள்ளிட்டவர்களை வழக்கறிஞர்கள் சந்தித்து பேசினார்.

அப்போது, மனதுக்குள் இருந்த பாரங்களை எல்லாம் இறக்கி வைப்பது போல, அனைத்தையும் வழக்கறிஞர்களிடம் கொட்டி தீர்த்துள்ளார் சசிகலா.

குறிப்பாக, தமக்கும் தமது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் இவ்வளவு இன்னல்கள் நேருவதற்கு நடராஜனும், தினகரனுமே முக்கிய காரணம் என்று அவர் புலம்பி தள்ளி இருக்கிறார்.

வெறும் குடும்ப தொழிலை மட்டுமே கவனித்து வந்த சசிகலாவை அரசியலுக்கு இழுத்து விட்டவரே, அவரது கணவர் நடராஜன். ஜெயலலிதாவிடம் சேர்ந்த நாட்களில் இருந்து நடராஜன் கூறியதை கேட்டே, முக்கிய இடத்தை பிடித்தார் சசிகலா.

அதே சமயம், ஜெயலலிதா இறந்த பின்னர், வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காமல், நாங்கள்தான் அதிமுக, குடும்ப அரசியல்தான் நடத்துவோம் என்று தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழாவில்,  ஆரவாரமாக பிரகடனம் செய்தார் நடராஜன்.

அப்போதே, மத்திய அரசின் கழுகு பார்வை சசிகலா குடும்பத்தின் மீது விழ ஆரம்பித்து விட்டது. அடுத்து கட்சியின் பொது செயலாளர் பதிவியை சசிகலா பிடித்தவுடன், சொத்து குவிப்பு வழக்கு தூசு தட்டி எடுக்கப்பட்டு விட்டது. முதல்வர் நாற்காலியை நெருங்கும்போது, தீர்ப்பு வெளியாகி தண்டனையும் விதிக்கப்பட்டு விட்டது.  

அடுத்து சசிகலாவை கேட்காமல், ஆர்.கே.நகர் தேர்தலில் தன்னை தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்டு தினகரன் களமிறங்கியது, மத்திய அரசின் கோபத்தை இன்னும் அதிகம் ஆக்கி விட்டது.

இந்த இரண்டு பேரின் தன்னிச்சையான அறிவிப்பு  இன்று ஒட்டுமொத்த குடும்பத்தையே, இவ்வளவு சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கிறது என்று சசிகலா வழக்கறிஞர்களிடம் புலம்பி தள்ளியுள்ளார்.

மேலும் தங்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று, சொந்த சமூகத்தில் பல பேரை எம்.எல்.ஏ க்களாகவும், அமைச்சர்களாக ஆக்கியும் அவர்கள் யாரும் இன்று நம் பக்கம் நிற்பதில்லை. 

பன்னீரே இப்படி எதிரியாகிவிட்ட நிலையில், மற்ற சமூகத்தினரிடம் எப்படி விசுவாசத்தை எதிர்பார்க்க முடியும்? என்றும் சசிகலா கூறி உள்ளார்.

click me!