நாஞ்சில் சம்பத் வீட்டை சுற்றிவளைத்த போலீஸ்... வர மறுத்து வாக்குவாதத்தால் பரபரப்பு...!

By vinoth kumarFirst Published Mar 19, 2020, 11:35 AM IST
Highlights

கடந்த மக்களவை தோ்தலின் போது புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து நெல்லிக்குப்பம் தொகுதியில் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் குறித்து அவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது அந்த மாநில உள்துறை கூடுதல் செயலர் சுந்தரேசன் தவளைகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

2019 தேர்தல் பிரசாரத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை விமர்சித்த விவகாரத்தில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் வீட்டிற்கு சென்றனர். ஆனால், கைதாக மறுத்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த மக்களவை தோ்தலின் போது புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து நெல்லிக்குப்பம் தொகுதியில் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் குறித்து அவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது அந்த மாநில உள்துறை கூடுதல் செயலர் சுந்தரேசன் தவளைகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்மந்தமாக நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இதுதொடர்பாக வழக்கில் நாஞ்சில் சம்பத் நேரில் ஆஜராகமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேரில் ஆஜராகுமாறு நாஞ்சில் சம்பத்துக்கு 17-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. இவ்வழக்கில், நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய குமரி மாவட்டம் மணலிகரையில் உள்ள அவரது வீட்டிற்கு புதுச்சேரி போலீசார் இன்று காலை சென்றனர். ஆனால், வரும் 21-ம் தேதி ஆஜராக சம்மன் கொடுத்திருந்த நிலையில் முன்கூட்டியே கைது செய்ய முயற்சி செய்வதா என்று கேட்டு, அவர்களிடம் நாஞ்சில் சம்பத் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்கூட்டியே கைது செய்ய வந்துள்ள போலீசார் நடவடிக்கையில் திட்டமிட்ட சதி என நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டினார். 

click me!