திவாகரனின் கட்சியில் சேரும் நாஞ்சில் சம்பத்!!! இணைப்புவிழா நடத்த பிரம்மாண்ட ஏற்பாடு?

Published : Aug 21, 2018, 05:15 PM ISTUpdated : Sep 09, 2018, 07:40 PM IST
திவாகரனின் கட்சியில் சேரும் நாஞ்சில் சம்பத்!!! இணைப்புவிழா நடத்த  பிரம்மாண்ட ஏற்பாடு?

சுருக்கம்

திவாகரனின் கட்சியை எக்கச்சக்கமாக அவ புகழ்வதை பார்த்தால் அவர் ஒருவேளை திவாகரனின் கட்சியில் கூட சேர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. 

எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தாலும் மக்கள் மனதில் முகம் பதியும்படி பிரபலமானவர்கள் என்று பார்த்தால் வெகு சிலரே நியாபகத்திற்கு வருவார்கள். இதில் நாஞ்சில் சம்பத்தும் ஒருவர். ஆரம்பத்தில் வைகோவின்  மதிமுக கட்சியில் இருந்தவர், பின்னர் அதிமுகவில் இணைந்தார். 

அதன் பிறகு அம்மா மறைவு சின்னம்மா பதவி ஏற்பு என பல பிரச்சனைகள் அதிமுகவில் போய்க்கொண்டிருந்த தருணத்தில் அதிமுகவில் இருந்துவிலகிய நாஞ்சில் அரசியலை விட்டு ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

அதன் பிறகு அவர் மீண்டும் வைகோவுடன் இணையப்போகிறார், திமுகவில் இணையப்போகிறார் என்று அவ்வப்போது புதுபுது தகவல்கள் வந்து கொண்டிருந்தன.ஆனால்  சமீபத்திய அவரின் நடவடிக்கைகள் அவர் அடுத்ததாக இணையப்போவது எங்கே என மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறது.


சமீப காலமாக டிவி சேனல்களில் அதிகம்  கலந்து கொள்ளும் நாஞ்சில் சம்பத் பல பட்டி மன்றங்களுக்கு தலைமைவகித்தும் வருகிறார். சிறையில் இருக்கும் சின்னம்மாவின் சகோதரர் ஆன திவாகன் சமீபத்தில் நடத்திய பட்டிமன்றம் ஒன்றிலும் அதே நடுவராக தலைமை வகித்திருக்கிறார் நாஞ்சில் சம்பத். 

அப்போது திவாகரனின் கட்சிக்கு சாதகமாக பல விஷயங்களை பேசி இருக்கிறார் நாஞ்சில்.
பட்டிமன்றத்தின் போது திவாகரனுக்கு புகழாரம் சூட்டிய நாஞ்சில் சம்பத் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும்போதெல்லாம.

திவாகரனின் கட்சி கொடி பறக்கும் காரில்தான் போகிறாராம், அதே காரில் தான் வருகிறாராம்.
அது போக அண்ணாவும் திராவிடமும் இணைந்து இருப்பது திவாகரனின் கட்சியில் தான் என்று வேறு கூறி இருக்கிறாராம். 

திவாகரனின் கட்சியை எக்கச்சக்கமாக அவ புகழ்வதை பார்த்தால் அவர் ஒருவேளை திவாகரனின் கட்சியில் கூட சேர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர் திவாகரனோடு சேர வந்தால் பிரமாண்டமாக இணைப்புவிழா நடத்த ஏற்பாடு செய்ய ப்ளான் வேறு இருக்காம்.

PREV
click me!

Recommended Stories

உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி
விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!