நாங்குநேரியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்! சட்டையை கிழிக்கும் வேலையில் பிஸியான கோஷ்டி...

By sathish kFirst Published Sep 25, 2019, 3:27 PM IST
Highlights

திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கம்போல சட்டையை கிழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சியினர் வழக்கம்போல சட்டையை கிழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரிக்கு நடக்கவுள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் திமுகவே விக்கிரவாண்டியில் போட்டியிட உள்ளது. நாங்குநேரியை காங்கிரஸுக்கே தள்ளிவிட்டது. இதில் போட்டியிட நான்கு பேர் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்டது, அதேபோல அதிமுகவில் இரண்டு தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் இதுவரை வேட்பாளர் யார்? என்ற முடிவுக்கு வராமலேயே சத்யமூர்த்திபவனின் இருக்கும் கோஷ்டிகள் சட்டையை கிழித்துக்கொள்கிறதாம்.

வழக்கம் போல, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சிலரது பெயர்களை முன்மொழிய, அதில் ஏதாவது ஒருவரை டெல்லி மேலிடம் இறுதி செய்து வேட்பாளராக அறிவிக்கும். அதே வழியில், பட்டியலை தயார் செய்துவிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர், விரைவில் டெல்லி செல்வார் என்று சத்யமூர்த்திபவனிலிருந்து சொல்கிறார்கள்.

தற்போது, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், அவரது தம்பி மகனும் நடிகருமான விஜய் வசந்த், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பில் உள்ள அமிர்தராஜ், பில்டர் ரூபி மனோகரன் ஆகியோர் மத்தியில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது.

இதில் குமரி அனந்தன் வயதில் மூத்த தலைவர்.  அவர் போட்டியிட விரும்புகிறாராம், ஆனால், அவருக்கு தேர்தல் செலவு பண்ண போதுமான காசு இல்லை என்று கூறுகின்றனர். அவரது தம்பியும், கன்யாகுமரி எம்பியுமான வசந்தகுமார், தனது மகன், விஜய் வசந்த்தை வேட்பாளராக்க விரும்புகிறார். அதற்காக செலவு செய்யவும் ரெடியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல குமரி அனந்தனுக்கும், அவரது தம்பி மகன் விஜய் வசந்துக்கு போட்டியாக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரான அமிர்தராஜும், நாங்குநேரியில் போட்டியிட, கடுமையான முயற்சி செய்து வருகிறாராம். இவர் ராகுலுக்கு நெருக்கமானவர் என்பதால், , பொருளாதார ரீதியாக செலவு செய்யக்கூடிய பார்ட்டி . அடுத்து, கட்டுமான தொழிலில் பிரபலமாக விளங்கும் ரூபி மனோகரனும், நாங்குநேரியில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.

இந்த நான்கு பேரில், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பில் உள்ள அமிர்தராஜுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் வழக்கம்போல சட்டையை கிழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

click me!