நாங்குநேரியை விட்டுக்கொடுக்க மாட்டோம்... மு.க.ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டை போடும் அழகிரி..!

By vinoth kumarFirst Published Sep 6, 2019, 3:44 PM IST
Highlights

50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என கே.எஸ்.அழகிரி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என கே.எஸ்.அழகிரி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் தனது நாங்குநேரி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். மேலும் திமுக எம்.எல்.ஏ. மறைவால் விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளுக்கும் செப்டம்பர் மாத இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற இடைத்தேர்தல்கள் அனைத்திலும் திமுக வேட்பாளர்களை களம் இறக்கியது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியை கேட்டது. ஆனால், திமுக கைவிரித்துவிட்டது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமாவால் காலியாகி உள்ள நாங்குநேரியில் காங்கிரஸ் தான் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி உறுதியாக உள்ளது. கூட்டணி தர்மப்படி கூட்டணி கட்சி போட்டியிட்ட தொகுதியில் இடைத்தேர்தல் என்றால் அந்த தொகுதி அதே கட்சிக்கு ஒதுக்கப்படுவது தான் கலைஞர் கருணாநிதி கடைபிடித்து வந்தார். ஆனால் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டிக்கு திமுக ஏற்கனவே வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இந்நிலையில், நாங்குநேரியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் பேசுகையில் குமரி, நெல்லை, தூத்துக்குடியில் பலம் இருந்தும் காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என கேள்வி எழுப்பினார். கூட்டணியின்றி வெற்றிபெற முடியுமா என்பது பற்றி விவாதிக்கவே செயல்வீரர் கூட்டம் நடைபெறுவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

 

50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற கட்சிகளை போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருந்து வருகிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் எப்போதும் வெற்றி பெறாதாக சரித்தரம் இல்லை. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும். நாங்குநேரி இடைத்தேர்லில் போட்டியிடுவதில் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் இருக்கிறது என கே.எஸ்.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!