தோல்வியை ஒப்புகொண்ட அ.தி.மு.க…….நமது அம்மாவில் கொடுத்த பலே விளக்கம் !

By Selvanayagam PFirst Published May 24, 2019, 8:57 PM IST
Highlights

லோக்சபா தேர்தல் பலத்த அடிவாங்கியிருக்கிறது அ.தி.மு.க .அ.தி.மு.க வின் கூட்டணிக்கு எடப்பாடியும் அவர் வைத்த பா.ஜ.க கூட்டணிதான் என அழுத்தமாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

விமர்சனத்தை பல்வேறு இடங்களை வாங்கி கொண்டிருக்கும் அ.தி.மு.க தலைமை அதன் நாளேட்டில் தோல்விக்கான  விளக்கத்தை கொடுத்திருக்கிறது. அதில்,"பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பிரசாரம் தான்,  தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வீழ்ச்சிக்கு காரணம். தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி தொடர 22 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் ஆதரவையும், அங்கீகாரமும் வழங்கியுள்ளனர்.

மனசாட்சி இல்லாது அவதூறுகள் பரப்பியும்,  கோடிக்கணக்கான  பணத்தை வாரி இறைத்தும், சில ஊடகங்களின் துணையுடன் திமுக கிளப்பிய புரளிகள் அனைத்தையும் தூள்தூளாக்கி தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர மக்கள் ஆதரவை தந்துள்ளனர்.

இடைத்தேர்தல் வெற்றி என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 2 ஆண்டுகால உழைப்புக்கும், மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி. இதன்மூலம் தமிழகத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் சேவை தொடர மக்கள் ஆதரவு அளித்து இருக்கின்றனர்.

ஆர்.கே.நகரில் டோக்கன் மூலம் வெற்றி பெற்றவர்கள், ஒட்டுமொத்த தமிழகத்தையும் டோக்கன் மூலம் ஆக்கிரமித்து விடலாம் என நினைத்தனர். அவர்களின் அரசியல் வாழ்க்கையையே மக்கள் முடிவுக்கட்டி இருக்கின்றனர்.

மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை ஏற்று, குறைகளை களைந்து  வரும் 2021ல் அதிமுக ஆட்சி மீண்டும் மலர உறுதி ஏற்பதாக கட்டுரை வெளியாகியிருக்கிறது"என சொல்லப்பட்டு இருக்கிறது. 

click me!