நிலாவுக்கு ராக்கெட் விடதெரிஞ்ச இந்தியாவுக்கு... குழிக்குள்ள விழுந்த குழந்தைய மீட்க வழி தெரியல...!! அவமானம், வெட்கக் கேடு...!!

Published : Oct 26, 2019, 11:44 AM IST
நிலாவுக்கு ராக்கெட் விடதெரிஞ்ச இந்தியாவுக்கு... குழிக்குள்ள விழுந்த குழந்தைய மீட்க வழி தெரியல...!! அவமானம், வெட்கக் கேடு...!!

சுருக்கம்

விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற செய்தி கேட்டு பெருமைப்படுகிற அதே காலக்கட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவது வெட்கித் தலைகுனிய வைக்கிறது.   

திருச்சி, மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் எனும் 2 வயது குழந்தை விழுந்துள்ள செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற செய்தி கேட்டு பெருமைப்படுகிற அதே காலக்கட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவதுவெட்கித் தலைகுனிய வைக்கிறது.

 

இத்துயரங்கள் இனியும் தொடராது தடுக்க அரசு தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும் எனவும், ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்பாடுகள் முடிந்த பிறகு நிரந்தரமாக மூடியோ, பயன்பாடுகள் நிறைவுறாது இருப்பின் தற்காலிகமாக மூடியோ வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் எனவும், இனி இப்படியான கொடுமை நடக்க காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன் என சிமான் வலியுறுத்தியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!