எனக்கு பக்கபலமாக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... நக்கீரன் கோபால் பேட்டி!

Published : Oct 10, 2018, 04:48 PM IST
எனக்கு பக்கபலமாக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... நக்கீரன் கோபால் பேட்டி!

சுருக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்துக்கு நக்கீரன் கோபால் இன்று சென்றார். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால், தாம் கைது செய்யப்பட்ட போது பக்கபலமாக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் என்னை சந்தித்து ஆறுதல் கூறினர். அதற்காக நேரில் சந்தித்து நன்றி கூறினேன் என்றார். டிடிவி தினகரன் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, டிடிவி தினகரன் எப்படி வந்தார் என ஏற்கனவே விளக்கமாக கூறியிருக்கிறோம். 

அவர் ஒரு உலகத்தலைவர். அவர் கருத்துக்கு, பதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன முறைகேடு தொடர்பாக தமிழக ஆளுநர் மாறி மாறி பேசி வருவதன் மூலம், இதன் பின்னணியில் சூட்சமம் இருப்பது தெரிகிறது. 

தனது கைது நடவடிக்கையின் பின்னணியில் மத்திய - மாநில அரசுகள் இருக்கின்றன. நக்கீரன் பத்திரிகையை முடக்க நினைக்கிறார்கள். ஆளுநரை விமர்சித்து எழுதியதில், அவர்கள் போட்ட திட்டம் வெளிவந்து விட்ட காரணத்தினால் கூட தன்னை கைது செய்திருக்கலாம் என்று நக்கீரன் கோபால் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?