அதிமுக வாழணும்.. எனக்கு அக்கறை இருக்கு… பாஜக எம்எல்ஏவின் ‘பழைய’ பாசம்

Published : Sep 24, 2021, 07:59 PM IST
அதிமுக வாழணும்.. எனக்கு அக்கறை இருக்கு… பாஜக எம்எல்ஏவின் ‘பழைய’ பாசம்

சுருக்கம்

 அதிமுக வாழணும்… எனக்கும் அதில் அக்கறை இருக்கு என்று உருகியிருக்கிறார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.

நெல்லை: அதிமுக வாழணும்… எனக்கும் அதில் அக்கறை இருக்கு என்று உருகியிருக்கிறார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் படு ஸ்பீடாக இருக்கிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் குதித்து உள்ளன.

இந் நிலையில் நெல்லையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பாஜக துணை தலைவரும், அக்கட்சியின் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பேசினார். அவர் பேசியதாவது: அதிமுக ஒரு காட்டாற்று வெள்ளம். நான் உள்பட பலர் அதில் இருந்து வெளியேறி வந்துள்ளனர்.

ஆனால் நான் ஏன் அந்த கட்சியில் இருந்து வெளியேறினேன் என்று கேட்டால்… காரணம் தெரியாது. ஆனாலும் அதிமுக வாழ வேண்டும் என எனக்கு அக்கறை இருக்கிறது என்று பேசினார்.

நயினார் நாகேந்திரன் வள்ளியூரை சேர்ந்தவர். அதிமுக எம்எல்ஏவாக 2 முறை வென்றவர். அதிமுக ஆட்சியில் இருந்த போது அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

தேர்தலுக்கு முன்பே மாற்றப்படும் செல்வப்பெருந்தகை..? டெல்லிக்கு போன ரிப்போர்ட்..!
ஆசிரியர் உயிரை பறித்த திமுக அரசு.. கொஞ்சம் கூட கவலையின்றி Vibe செய்யும் ஸ்டாலின்.. இபிஎஸ் ஆவேசம்!