சூடு பறக்கும் நக்மாவின் பிரசாரம்...  ஈடு கொடுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்...

 
Published : Dec 11, 2017, 05:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
சூடு பறக்கும் நக்மாவின் பிரசாரம்...  ஈடு கொடுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்...

சுருக்கம்

nagma in gujrat election compaign

குஜராத்தைக் கலக்கி வருகிறார் நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா. சூடு பறக்கும் அவரது பிரசாரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேட்பாளர்கள் கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர். 

குஜராத் சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகையும் காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று அவர் ஒரு இருசக்கர வாகன பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினார். ஆமதாபாத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பங்கஜ் படேலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நக்மா, பரேஷ் தனானி, சுபோத் காந்த் சகாய் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட செல்பியையும்  தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

குஜராத் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் குஜராத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகையும், காங்கிரஸ் நிர்வாகியுமான நக்மா பிரச்சாரம் செய்து வீதி, வீதியாக மக்களைச் சென்று சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். 

இவ்வாறு, தான் அனல் பறக்க பிரசாரம் செய்த போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நக்மா. மோடியின் மண்ணில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அடித்துக் கூறி வருகிறார் நக்மா.

PREV
click me!

Recommended Stories

அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?
விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!