ஆளுனர் முடிவு அப்புறம்... முதலில் பேரறிவாளனுக்கு பரோல் கொடுங்கள்..!! அனல் கக்கிய எம்எல்ஏ அன்சாரி..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 24, 2020, 6:30 PM IST
Highlights

அமைச்சர் CV.சண்முகம் அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் நல்ல பதில்களை தந்ததும், பல கருத்துகளை கூர்ந்து கவனித்து குறிப்பெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

சிறைகளைஆய்வு செய்ய எம்எல்ஏக்கள் குழு  அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் முதமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார்.  நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ பேசியதாவது... பேரறிவாளன் உட்பட 7 கைதிகள் விவகாரத்தில் கவர்னர் ஒரு முடிவுக்கு வரும் வரை அவர்களுக்கு தொடர் பரோல் வழங்க வேண்டும்.அது போல் 60 வயதை கடந்த அனைத்து நோயாளி கைதிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும். 

சிறைச்சாலைகளை பார்வையிட்டு கைதிகளின் உரிமைகளை கேட்கும் விதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்து, சிறைச்சாலை ஆய்வுகளை மேற்கொள்ள மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் முன் முயற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதே போன்று சிறை மானியக் கோரிக்கையில் பேசிய தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ அவர்கள் கோவை கைதிகள் உட்பட சாதி, மத கலவரத்தில் கைதாகியுள்ளவர்களை பாராபட்சமின்றி விடுவிக்க வேண்டும் என்றும், 

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு தொடர் பரோல் வழங்க வேண்டும் என்றும், சிறைச் சாலைகளில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் பேசினார். தாயகம் கவி, எழிலரசன் போன்ற திமுக MLA-க்களும் சிறை சீர்த்திருத்தம் குறித்தும் விரிவாக பேசினர்.அமைச்சர் CV.சண்முகம் அவர்கள் அனைவரின் கேள்விகளுக்கும் நல்ல பதில்களை தந்ததும், பல கருத்துகளை கூர்ந்து கவனித்து குறிப்பெடுத்ததும் குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக கைதிகள் அனைவருக்கும் பரோல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது கவனிக்கத்தக்கது.
 

click me!