மக்கள் முன் சரணடைந்த நாகை எம்எல்ஏ - கருத்து கேட்கும் தமீமுன் அன்சாரி

First Published Feb 13, 2017, 11:56 AM IST
Highlights


மக்களின் கருத்தை கேட்டு விட்டு முடிவெடுங்கள் என தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக தனது தொகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் கருத்தறிய கருத்து கேட்பு பெட்டி வைத்துள்ளார் நாகை சட்டமன்ற உறுப்பினர்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது ஜவாஹிருல்லாவோடு  ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனித நேய மக்கள் கட்சியிலிருந்து பிரிந்து சென்று மனித நேய ஜனநாயக கட்சி என்ற கட்சியை தொடங்கி கடைசி நேரத்தில் இரண்டு எம்எல்ஏ சீட்டுகளை தட்டி சென்று பரபரப்பை ஏற்படுத்தியவர் தமீமுன் அன்சாரி.

மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.ஏ. ஜெயபாலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாகை தொகுதி தமீமுன் அன்சாரிக்கும் ,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியும் அவருக்கு கொடுக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஏ.ஜஃபருல்லாவை அதிர்ச்சி தோல்வியடைய செய்தார்.

ஏ.கே.எஸ் விஜயன் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் திமுகவால் இங்கு வெற்றி பெற முடியவில்லை.

இப்படி கடும் நெருக்கடிக்கு இடையேயும் தனக்கு வாக்களித்த நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தெளிவான முடிவை எடுத்துள்ளார் அத்தொகுதி எம்எல்ஏ தமீமுன் அன்சாரி .

சசிகலாவோ ஓபிஎஸ்சோ யார் ஆட்சியை பிடித்தாலும் கவலையில்லை ஓட்டு போட்ட மக்களில் பெரும்பாலோனோர் என்ன சொல்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என களத்தில் குதித்துள்ளார் இந்த எம்எல்ஏ.

இதைதான் நாங்களும் கேட்டு கொண்டிருக்கிறோம் என தமீமுன் அன்சாரியின் இந்த நடவடிக்கையை பார்த்த வேற்று தொகுதி வாக்காளர்களும் "இதைதான் நாங்களும் எதிர்பார்கிறோம் ஜெ. தலைமைக்கு ஓட்டளித்த மக்கள் தற்போது யாரை ஆதரிக்கிறார்கள் என்ற கருத்தை பெற்ற பிறகே முதல்வர் பதவியேற்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

சசிகலாவா ஓபிஎஸ்சா என்று முடிவெடுக்கவில்லை, ஆனால் தனக்கு ஓட்டு போட்ட பெரும்பாலான மக்களின் எண்ணம் என்னவாக இருக்கிறது என்பதை அறிய முற்பட்ட தமீமுன் அன்சாரியின் முயற்சி பாராட்டுக்குரியது.

click me!