எம்.பி., தேர்தலில் போட்டி! தெறித்து ஓடும் நாம் தமிழர் நிர்வாகிகள்! அதிர்ச்சியில் சீமான்...

By sathish kFirst Published Sep 29, 2018, 12:49 PM IST
Highlights

எம்.பி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று சீமான் முடிவெடுத்துள்ள நிலையில் வேட்பாளராகிறீர்களா என்று அழைப்பு விடுத்தால் நிர்வாகிகள் செல்போனை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விடுகிறார்களாம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 232 தொகுதிகளில்வேட்பாளரை நிறுத்தியது. கடலூரில் சீமான் போட்டியிட்டார். ஆனால் சீமான் உள்ளிட்ட 232 நாம் தமிழர் கட்சியினரும் டெபாசிட்டை இழந்தனர். ஆனாலும் கூட 2 விழுக்காடு வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்தது. இந்த வாக்குகறை வைத்து சீமான் நாடாளுமன்ற தேர்தலில் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்பதுதான் பெரும்பாலான நாம் தமிழர் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு.
   
தேர்தல் வேலை, பூத் ஏஜென்ட் என்று கணிசமான அளவிற்கு கல்லா கட்டிவிடலாம் என்றும் நாம் தமிழர் கட்சியினர் உற்சாகமாக இருந்தனர். ஆனால் சீமானோ கூட்டணி எல்லாம் கிடையாது. 40 தொகுதிகளிலும் தனித்து தான் நாம் தமிழர் போட்டியிடும் என்று முடிவெடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு தான் தேர்தல் என்றாலும் தற்போதே வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை போரூரில் உள்ள சீமான் வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  
 சீமானுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு சிலர் மட்டுமே சில தொகுதிகளை கூறி அங்கு போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர். மற்றபடி மாவட்ட நிர்வாகிகள்தேர்தலில் போட்டி என்றால் தலைதெறிக்க ஓடுகின்றனர். காரணம் கடந்த சட்டமன்ற தேர்தலில் கை காசை செலவு செய்ததோடு மட்டும் அல்லாமல் கடனை உடனை எல்லாம் வாங்கி நாம் தமிழர் வேட்பாளர்கள் தேர்தல் பணியாற்றியுள்ளனர். ஆனால் தேர்தல் முடிவு சுத்தமாக அனைவரையும் கவிழ்த்துவிட்டது.
   
தனித்து நின்றால் இதே நிலை தான் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படும் என்பதால் தேர்தலில் போட்டியிடுகிறிர்களா என்று தலைமை கேட்டால், வீட்டில் மனைவிக்கு உடம்பு சரியில்லை, மாமனார் தவறிவிட்டார் என்று ஆளுக்கு ஒரு கதையை சொல்கிறார்களாம். இதனால் வேட்பாளர் தேர்வு பணியை தற்காலிகமாக நாம் தமிழர் ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல் றெக்கை கட்டி பறக்கிறது.

click me!