கருணாநிதி மரணத்தில் மர்மம்.? அழகிரி சர்ச்சை.. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்.

Published : Jan 05, 2021, 12:25 PM IST
கருணாநிதி மரணத்தில் மர்மம்.? அழகிரி சர்ச்சை.. இதற்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்.

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி மரணத்தில் மர்மம் உள்ளதாக மு க அழகிரி சர்ச்சை கிளப்பி உள்ளார். எனவே அதற்கு முதலில் ஸ்டாலின் பதில் கூற வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி மரணத்தில் மர்மம் உள்ளதாக மு க அழகிரி சர்ச்சை கிளப்பி உள்ளார். எனவே அதற்கு முதலில் ஸ்டாலின் பதில் கூற வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார்  கூறியுள்ளார்.  மீன்வளத் துறையில் பணியாற்றிய போது இறந்தவர்களின் வாரிசுகள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போது அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருந்தது. 

கூட்டணி வேறு, கொள்கை வேறு,  கூட்டணியில் இருப்பதை பாஜக மறுக்கவில்லை. தேசிய தலைமை கூறும் போதுதான் அதை அதிகாரப்பூர்வ கருத்தாக எடுத்துக் கொள்ள முடியும் என்றே கூறுகிறது. எதிர்காலத்தில் ஆளப்போகும் கட்சி அதிமுகதான். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்கக்கூடிய  கட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கப்படும்.  திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது வெறும் கனவு. இதனை ஸ்டாலினின் உடன் பிறந்த சகோதரர் அழகிரி தற்போது தெரிவித்துள்ளார். கட்சியின் மூத்த நிர்வாகிகளை புறக்கணித்துவிட்டு தனது மகன் உதயநிதியை மட்டும் ஸ்டாலின் உயர்த்த பார்க்கிறார். 

அதேபோல் கிராம சபையை குண்டர் சபையாக அவர் மாற்றியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக முக அழகிரி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதற்கு முதலில் ஸ்டாலின் பதில் கூற வேண்டும். அம்மா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  திமுக உடையும் தருணம் வந்துவிட்டது,  ஆயுள் முழுக்க போஸ்டர் மட்டுமே ஸ்டாலினால் அடிக்க முடியுமே தவிர முதல்வராக முடியாது இதை அழகிரியே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் அறிமுகம் செய்தது திமுக தான். ஸ்டாலின் உத்தமரை போல  பேசுவதை மக்கள் நகைச்சுவையாகவே பார்க்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!