ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு... எடப்பாடியை காண்டாக்கும் பிரேமலதா..!

Published : Jan 31, 2021, 04:27 PM ISTUpdated : Feb 10, 2021, 12:28 PM IST
ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு... எடப்பாடியை காண்டாக்கும் பிரேமலதா..!

சுருக்கம்

சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். 

சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். 

சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால், கூட்டணி முடிவை தாமதிப்பதில் யாருக்கும் எந்த பலனில்லை. உடனடியாக அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தாமதமின்றி  தொடங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியின் தான் தேமுதிக இருக்கிறது. 234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராகி வருகிறது. எனினும் கூட்டணி குறித்த இறுதி முடிவை தேமுதிக பொதுக்குழு, செயற்குழு எடுக்கும் என்றார்.

மேலும், பேசிய தொடர்ந்து சசிகலா விடுதலை குறித்து பேசிய பிரேமலதா, `ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அதே நேரம் நான் சசிகலாவை ஆதரிப்பது, அதிமுகவுக்கு எதிரான நிலை என்று யாரும் பார்க்க கூடாது. சசிகலா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார்.

மூன்றாவது அணி குறித்து இப்போது கருத்து கூறமுடியாது. வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பா.ம.க-வின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் அனைத்து ஜாதியினரும் கோரிக்கை வைத்தால் என்னவாகும்? எனக் கேள்வி எழுப்பினார். திமுக கொடுக்கும் பொய் வாக்குறுதிகளை மக்கள் கவனித்து வருகின்றனர். மக்கள் உஷாராகிவிட்டனர். தேமுதிக தலைவர் ஆதரவு தெரிவித்தால் இந்த முறை சட்டப் பேரவையில் எனது குரல் ஒலிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!