என் உழைப்பை திருடி விட்டார்கள்... அடுத்தும் திமுக ஆட்சி அமையாது... வி.பி.துரைசாமி சாபம்..!

By Thiraviaraj RMFirst Published May 22, 2020, 2:39 PM IST
Highlights

திமுகவின் அழிவு காலம் தொடங்கி விட்டது. தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலை திமுகவுக்கு ஏற்படும் என அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். 
 

திமுகவின் அழிவு காலம் தொடங்கி விட்டது. தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலை திமுகவுக்கு ஏற்படும் என அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் பேசும்போது, ‘’திமுக தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து பிறழும் போது நான் கட்சி மாறுவதில் தவறில்லை. திமுகவில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. ஈவெராவும், அண்ணாவும் உயிரோடு இருந்திருந்தால், முருகனை தலைவராக்கிய கமலாலயத்திற்கு வந்திருப்பார்கள். என் உழைப்பை திருடி  விட்டார்கள். நான் வேறு கட்சியில் இருந்து இருந்தாலும், நானும் தம்பி முருகனும் வைணவ குலத்தைச் சேர்ந்தவர்கள். பெருமாளை வணங்கக் கூடியவர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் விரதமிருந்து வழிபாடு நடத்தி அதன்படி வளர்ந்தவர்கள். மிகவும் இறை பக்தி உள்ளவர்கள். தமிழ் கடவுளான முருகன் பெயரை வைத்திருக்கிறார். தமிழ் கடவுள் முருகனை சந்தித்தது இப்படி மாறி இருக்கிறது. தமிழர்கள் அதிகம் இருக்கும் இந்த தமிழ்நாட்டில், தமிழ் கடவுள் முருகனை சந்தித்தது தவறு என்றால் நான் என்ன சொல்வது?

நான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் யாருடைய மனதையும் புண்படுத்தி பேசுவதை விரும்பாதவன். தேசம்தான் முக்கியம். இந்த தேசத்தை முன்னிறுத்துகின்ற தலைவர் யார் என்று பார்த்தால், இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்தும் கூட, இந்தியாவை முன்னேறும் நாடு என்றுதான் சொல்ல முடியும். முன்னேறிய நாடு என்று சொல்ல முடியாது. முன்னேறிய நாடு என்று சொல்லக்கூடிய அமெரிக்க ஜனாதிபதியே பாரத பிரதமர் மோடியின், உறுதுணை இல்லாமல் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

அந்த அளவுக்கு இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார், என்று சொன்னால் என்னைப் போன்றவர்கள், அவருடன் தானே இருக்க வேண்டும். அதுதானே நியாயம். ஜாதி இல்லை, மதம் இல்லை இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் என்று சொல்லும் பாஜகவுடன் துணை நிற்பதே, இப்போதைய தேவை. என் உழைப்பை திருடி விட்டார்கள். என் உழைப்புக்கு ஊதியம் இல்லை. முருகன் 45 வயது இளைஞர், நான் வயதானவர்களுடன் பழகி, பழகி நானும் இப்படி ஆகிவிட்டேன். இப்போது ஒரு இளைஞரிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்களிடம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய வரவேற்புகளைப் பார்த்து நெகிழ்ந்து போய்விட்டேன். வார்த்தைகள் வரவில்லை”என அவர் தெரிவித்துள்ளார். 

click me!