6 மாதங்களுக்கு பிறகு வெளியே வந்த தினகரன்.. கொஞ்சம் கூட கெத்து குறையாமல் உற்சாக வரவேற்பு.. மிரண்டு போன அதிமுக

By vinoth kumarFirst Published Oct 30, 2020, 6:40 PM IST
Highlights

கொரோனா காரணமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அரசியல் செய்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அரசியல் செய்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கம் தேவர் நினைவிடத்தை நோக்கி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் படையெடுத்த வண்ணம்  இருந்தனர். இன்று மாலை வரை அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் ஒதுக்கி தந்துள்ளதால் அந்தந்த நேரத்தில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பசும்பொன் மரியாதை செலுத்தி விட்டு சென்றனர். பின்னர், புதுச்சேரியில் இருந்து ராமநாதபுரத்திற்கு வந்த டிடிவி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்ற தினகரன், மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் பேசுகையில்;- கொரோனா காரணமாக இந்த ஆறு மாத காலமாக அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும் அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார். இது குறித்து தனது கட்சியின் நிர்வாகிகளிடம், கொரோனாவால் நமக்கும், பிறருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் கூட்டங்கள் சேர்க்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்த தினகரன், முதல் நிகழ்ச்சியாக இதில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!