ராஜினாமா செய்வதை முதல்வர்கள் தடுக்கும்போது நான் என்ன செய்ய முடியும்?!: தங்க சங்கிலிகள் மினுங்க முத்துக்கருப்பன் உடைத்த உண்மை

First Published Apr 2, 2018, 5:04 PM IST
Highlights
Muthukaruppan says he will not again give resignation letter


காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மோடி காட்டும் ‘அலட்சிய போக்கு’ விவகாரத்தை விட ஆயிரம் மடங்கு மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். ’தற்கொலை செய்து கொள்வேன்’ என்று நவநீதகிருஷ்ணன் ஆதங்கப்பட்டபோது, தமிழகம் கமுக்கமாக சிரிக்கத்தான் செய்தது. காரணம், நவநீதகிருஷ்ணன் யார்? என்பது மக்களுக்கு தெரியும். 

இந்நிலையில்  இன்று காலை முத்துக்கருப்பன் எம்.பி. யின் ராஜினாமா கடிதம் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பானபோது, ‘மனுஷன்யா நம்ம முத்துக்கருப்பன்!உண்மையான் உணர்வுள்ள ஒரே எம்.பி.’ என்று தமிழ்நாடு கொண்டாடியது. 

ஆனால் அரை நாள் கூட நீடிக்கவில்லை அந்த சந்தோஷம், ‘நானும் அதே குட்டையில் ஊறிய அ.தி.மு.க. மட்டையே’ என நிரூபித்துவிட்டார் முத்து. 

இந்த ராஜினாமா டிராமா தொடர்பாக டெல்லியில் மீடியா ஒன்றிடம் கேமெரா முன்பாக பேசியிருக்கிறார் கருப்பன். கழுத்தில் முறுக்கான தங்கச்சங்கிலிகள் மின்னி மினுங்க, ஏக தோரணையுடன் ஷோபாவில் சாய்ந்து அமர்ந்திருப்பவர் “நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை யாரிடமும் சமர்ப்பிக்கவேயில்லை. எழுதி வெச்சது அப்படியே இருக்குது. மீடியாவாதான் பரபரப்பை கிளப்புச்சு. இதை கேள்விப்பட்டதும் தமிழ்நாட்டின் ரெண்டு முதல்வர்களும் என்னை அழைச்சாங்க. அம்மாவுக்கு அப்புறம் அவங்களைத்தான் நான் தலைவர்களா ஏத்துட்டிருக்கேன். அவங்க என்னை அண்ணே!ம்பாங்க, நானும் அவங்களை அப்படித்தான் கூப்பிடுவேன். 

அவங்க ரெண்டு பேரும் என்னிடம், ‘ராஜினாமா செய்யாதீங்கண்ணே’ன்னு சொல்லிட்டாங்க. தலைவர்களே இப்படி தடுக்குறப்ப நான் என்ன பண்ண முடியும், ஒரே டயலமால (குழப்பம்) இருக்கேன்.” என்றிருக்கிறார். 

விதைச்ச நெல்லுக்கு ஒரு சொட்டு தண்ணீர் இல்லாம தமிழ் விவசாயி காய்ஞ்சு கிடக்குறான். இந்த நேரத்துல கொஞ்சம் கூட கூசாமா டிராமா போடுற அ.தி.மு.க.வின் அதிகார செல்வந்தர்களை எதில் நோவது? எப்படியோ முத்துக்கருப்பன், மக்களுக்காக தன்னை ராஜினாமா செய்ய விடாமல் தடுப்பது முதல்வர்கள்தான் அப்படின்னு சொல்லிட்டார். அந்த வரைக்கும் அவரை பாராட்டலாம்! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
 

click me!