இந்தியாவிற்கு விரைவில் பொருளாதார பிரச்சனை வரும்... எச்சரிக்கை விடுக்கும் முத்தரசன்!!

Published : Apr 13, 2022, 09:56 PM IST
இந்தியாவிற்கு விரைவில் பொருளாதார பிரச்சனை வரும்... எச்சரிக்கை விடுக்கும் முத்தரசன்!!

சுருக்கம்

இலங்கையை போல் இந்தியாவிற்கு விரைவில் பொருளாதார பிரச்சனை வரும் என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையை போல் இந்தியாவிற்கு விரைவில் பொருளாதார பிரச்சனை வரும் என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், கலந்துக்கொண்டு பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கி அவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் கண்காணிப்பாளராக பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாமலேயே ஊதியம் வழங்கப்படுவதாகவும், முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் இதனை தடுக்க வாரம் ஒரு முறை சம்பள ரசீது வழங்க வேண்டும்.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை 25 சதவீதம் குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 100 நாள் வேலை திட்டத்தில் கிராமப்புறத்தில் மட்டுமில்லாமல் நகர்ப்புறத்திலும் பணி வழங்க வேண்டும். இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு பல குடும்பங்கள் படகில் வரத்தொடங்கி உள்ளனர். அங்கு மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இப்படிப்பட்ட போராட்டம் நடக்க வெகுநாட்கள் இல்லை. 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற போது பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை ஏறாமல் இருந்தது. தேர்தல் முடிந்த பின் அவற்றின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் உணவு பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது.

ஏழை எளிய  மக்கள் தொடர்ந்து பல பிரச்சனைகளை சமாளித்து வருகிறார்கள். குறிப்பாக அத்தியாவாசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிபட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை விரைவில் இந்தியாவிற்கு வரும். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்திற்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்கிறது என மத்திய அரசு பொய் சொல்கிறது. மருந்து மாத்திரைகள் விலைகளும், சுங்க கட்டணமும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வுக்கு எதிராக இலங்கையை போல் இந்தியாவிலும் மக்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி