"நான் காரணமாக இருக்கமாட்டேன்னு சொல்லிட்டு உடைச்சிட்டீங்களே வைகோ அண்ணாச்சி" - முத்தரசன் வேதனை

 
Published : Dec 27, 2016, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
"நான் காரணமாக இருக்கமாட்டேன்னு சொல்லிட்டு உடைச்சிட்டீங்களே வைகோ அண்ணாச்சி" - முத்தரசன் வேதனை

சுருக்கம்

மக்கள் நலக்கூட்டணி உடைய நான் காரணமாக இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப நீங்களே அதற்கு காரணமாயிட்டீங்களே என்று வைகோவுக்கு சிபிஐ செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகி கொள்வதாக கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. மக்கள் நலக்கூட்டணி உடைவதற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்று கூறினார். ஒவ்வொரு கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கும் அது தவறல்ல , ஆனால் அதற்காக மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகியது அதிர்ச்சியளிக்கிறது.

எந்த நிலையிலும் மக்கள் நலக்கூட்டணியை உடைக்க நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று சொன்ன அண்ணன் வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. ஆனாலும் நட்பு தொடரும் என்ற நல்ல செய்தியை கூறியுள்ளார்.. அதை வரவேற்கிறோம்.  இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார். 

மதிமுக நடவடிக்கையை வரவேற்கிறது. நாளை புதுச்சேரியில் நடத்தும் மாநாட்டில் மதிமுக பங்கேற்காத நிலை உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து பொது வெளியில் நான்கு கட்சிகளும் இணைந்து செயலபட முடியாது என்ற நிலையை மதிமுக உணர்ந்திருக்கலாம். அவர் தொடர்ந்து நட்பு நீடிக்கும் என்று கூறியுள்ளதை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது. இவ்வாறு திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு