ராஜுவ்காந்தி கொலையாளி முருகன்.. ஜீவசமாதி அடைய... சிறையில் தொடர் உண்ணாவிரதம். பதட்டத்தில் சிறைச்சாலை.!

By T BalamurukanFirst Published Jun 9, 2020, 9:18 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு  சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிகாரிகளும் முருகனை சமாதானப்படுத்தும் முயற்சியில் தோல்வி அடைந்து வருகிறார்கள்.
 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகன் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு  சிறையில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் சிறைச்சாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அதிகாரிகளும் முருகனை சமாதானப்படுத்தும் முயற்சியில் தோல்வி அடைந்து வருகிறார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு மே மாதம் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டவர் முருகன். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் என 4 பேருக்கு மரண தண்டையும், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் என 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதி மன்றம் கருணை அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்தது.28 ஆண்டுகாலமாக சிறையில் இருப்பதால் தாங்கள் இரண்டு ஆயுள் தண்டனை காலத்தை கடந்துவிட்டோம், எங்களை விடுதலை செய்ய வேண்டும் என முருகன் உள்ளிட்டடோர் கோரி வருகின்றனர்.


தமிழ் தேசிய அமைப்புகள் பேரறிவாளன் உட்பட நான்கு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதே அனைத்துக்கட்சி ஒப்புதலோடு தீர்மானம் போடப்பட்டது.
 
இவர்கள் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் மாநில ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் இருப்பதாக தீர்ப்பு சொல்லியது. ஆனால் இன்று வரைக்கும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுகுறித்து அவ்வப்போது பாமக டாக்டர் .ராமதாஸ் தமிழ் சேதிய அமைப்புகள் திமுக விசிக போன்றகட்சிகள் குரல் எழுப்பியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அவர்களுக்கு விடுதலை கிடத்தபாடில்லை.

இந் நிலையில், தான் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டுமென முருகன் தரப்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை முன் வைத்து கடந்த ஜூன் 2 முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.8 நாட்களாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென முருகனிடம், சிறைத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

click me!