ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா... அதிர்ச்சியில் பாஜகவினர்..!

Published : Jun 09, 2020, 05:14 PM ISTUpdated : Jun 09, 2020, 05:25 PM IST
ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா... அதிர்ச்சியில் பாஜகவினர்..!

சுருக்கம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் பாஜகவில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய முகமாக விளங்கிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகக் காங்கிரசில் இருந்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனையடுத்து,  ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையிலும் அவருக்கு இடம் கிடைக்கும் என்று பரவலாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி தொல்லை இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா உறுதியானதால் தற்போது அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவரின் தாயாரான மாதவி ராஜீ சிந்தியாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லாதபோதும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகிறார்.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!