கறுப்பர் கூட்டம் ஏற்படுத்திய காயத்திற்கு மருந்து போடும் முருகன்: நாளை மாலை ஒவ்வொருவரும் இதை செய்ய வேண்டுமாம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 8, 2020, 4:01 PM IST
Highlights

வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் என தமிழக பாஜக மாநிலத்த தலைவர் எல் .முருகன் அழைப்பு விடுத்துள்ளார். கந்த சஷ்டி கறுப்பர் கூட்டத்தால் இழிவு படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
 

வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் என தமிழக பாஜக மாநிலத்த தலைவர் எல் .முருகன் அழைப்பு விடுத்துள்ளார். கந்த சஷ்டி கறுப்பர் கூட்டத்தால் இழிவு படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும்  இந்த செயலுக்கு கண்டனம்  தெரிவித்தனர். இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூபில் பதிவிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசல், சுரேந்திரன், குகன், சோமசுந்தரம் என்பவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

கறுப்பர் கூட்டம் இதுவரை பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்கள் அனைத்தையும் அழிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்தசஷ்டி பாடல் இந்துக்கள்  மனதில் காயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் வீடுகள்தோறும் வேல் பூஜை செய்து கந்தசஷ்டிகவசம் ஒலிக்கட்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் விவரம்:-கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை , வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து. 

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, நாளை மாலை சரியாக 6.01 மணிக்கு, பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டுவோம்.மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்போம். இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!