ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள்... விநாயகர் ஹிந்தி கடவுளா..? திருமாவளவன் கேள்வி..!

By Thiraviaraj RMFirst Published Jan 8, 2021, 1:00 PM IST
Highlights

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் ஹிந்தி கடவுளா ? "தைப்பூசத்துக்கு விடுமுறை விடுவது சநாதனத்தை புகுத்தும் செயல்.‌ இதனால் நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா? 

ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் ஹிந்தி கடவுளா ? "தைப்பூசத்துக்கு விடுமுறை விடுவது சநாதனத்தை புகுத்தும் செயல்.‌ இதனால் நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப்பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் ஹிந்தி கடவுளா ? "தைப்பூசத்துக்கு விடுமுறை விடுவது சநாதனத்தை புகுத்தும் செயல்.‌ இதனால் நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா? ‘ குல தெய்வ வழிபாட்டிலும் சனாதனம் புகுந்து பெரு தெய்வ வழிபாடு வந்து விட்டது. இந்துக்கள் என ஒற்றை சொல்லில் எல்லோரையும் மயக்கி சனாதன சக்திகள் கிடத்தி இருக்கிறது’ என அவர் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ‘’திருமாவளவனுக்கு திராணி இருந்தால் அல்லாவும், யேசுவும் தமிழ்க் கடவுளா? என்று கேட்க முடியுமா? இந்துக் கடவுளை, வழிபாட்டை இழிவுபடுத்தும் திருமாவளவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்’’ என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

click me!