அன்புமணியை தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்குது திமுக... தன் பங்கிற்கு மரண கலாய் கலாய்த்த முரசொலி!!

By sathish kFirst Published Feb 24, 2019, 8:28 PM IST
Highlights

பாமக அதிமுகவுடன் சேர்ந்ததிலிருந்து விடாமல் தெளிய தெளிய வெச்சு செய்து கொண்டிருக்கிறது திமுக ஐடி விங், போததக் குறைக்கும் இன்று முரசொலியும் தனது பங்கிற்கு பாமகவை கலாய்த்து கட்டுரை வெளியிட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பிஜேபி கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இந்த நிலையில் முரசொலி நாளிதழில் நாணலாய் வளைகிறீர்களா! நாணயத்துக்கு வளைகிறீர்களா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி மோடிக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்றால் மோடிக்கு மசாஜ் செய்வது போல என்று ஒரு கார்டூன் வந்தது.

இதுதான் அவர் கொடுக்கும் அழுத்தம். மோடிகிட்ட போய் அன்புமணி எப்படி பேசுவார்? எடப்பாடி பழனிசாமியைப் போல வாயைப் பொத்திக் கொண்டு, ‘ஐயா, பாத்துப் பண்ணுங்கய்யா... எனக் கேட்பார்' மோடி இவரைப் பார்த்து போ.. போ... என விரட்டுவார்! இதுதான் நடக்கப் போகிறது. 

சின்ன அய்யாவே, இப்படி நடித்துக் காட்டிய பேச்சு நீங்கள் பார்த்ததாகக் கூறிய வாட்ஸ் ஆப்பில் இன்று ஓடுகிறதே. அந்த வாட்ஸ் ஆப் காட்சிகளில் நீங்கள் பேசியது மட்டுமின்றி அந்தக் கேலி பேச்சை ரசித்து மகிழ்ந்து நாங்கள் கை தட்டியதும் வருகிறதே! அதனை எங்களிடம் காட்டி நேற்று இப்படி எல்லாம் பேசிய உங்க சின்ன அய்யா, மோடி, மற்றும் எடப்பாடி பழனிசாமி இரண்டு பேருக்கும் மசாஜ் செய்ய உங்கள் சின்ன அய்யா புறப்பட்டுவிட்டாரே, உங்களுக்கு வெட்கமில்லையா? என்ற கேள்விக்கு பாட்டாளி சொந்தங்கள் பதில் சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். 

"மானங்கெட்டவனுங்க.. இவனுகளெல்லாம் நெடுஞ்சாலை என்றால் வளர்ச்சிதான். ஆனால, இந்த நெடுஞ்சாலை வளர்ச்சி கிடையாது! இது எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும்தான் வளர்ச்சியே தவிர மக்களுக்கு இதுல வளர்ச்சி கிடையாது. மானங்கெட்ட அரசாங்கம் இதெல்லாம்! இங்க உள்ள மருத்துவமனைக்கு போய் கேட்டா காரி உமிழுறாங்க மக்களெல்லாம். இதுக்கெல்லாம் இருக்குது எலக்ஷன் நேரத்துல பாருங்க. மக்கள் இவங்களை எல்லாம் விரட்டி அடிக்கப் போறாங்க. இவன் ஒருத்துனுக்கும் டெபாசிட் கிடைக்காது." 

இப்படியெல்லாம் எள்ளும், கொள்ளும் வெடிக்கப் பேசிய அன்புமணி இப்போது ஏன் அவர்கள் காலில் விழுந்து கிடக்கிறார். எலெக்ஷன் நேரத்துல பாருங்க.. மக்கள் இவனுகளை ஓட ஓட விரட்டப போறானுங்க.. என்று கூறினாரே. இப்போது அவரது கருத்தை மாற்றிக் கொள்ள காரணம் கலெக்ஷனா என்று கேட்கிறார்களே. மறுக்க வார்த்தை இல்லாது மவுனியாகக் கிடக்கும் பாட்டாளி சொந்தங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.  

சமூக வலைதளங்களில் வைரலான எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்யும் பழைய வீடியோக்கள் பற்றியும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடியோக்களுக்கு பாட்டாளி சொந்தங்களால் மறுக்க முடியவில்லை என்று முரசொலியில் விமர்சனம் செய்துள்ளது. சமூக வலைதளங்களில் ஒருபுறம் தமிழிசை சௌந்தர்ராஜன் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

தற்போது, அவரை மிஞ்சும் வகையில் சமூகவலைதளம் முழுவதும் உங்களுடைய பழைய பேச்சுகள் வைரலாகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரையில் இறுதியில் மக்களுக்கு மட்டுமல்ல. எங்களுக்கும் உள்ள சந்தேகம்... ‘நாணலாய் வளைகிறீர்களா? அல்லது நாணயத்துக்கு வளைகிறீர்களா? என்பதுதான்’ என்று முடித்துள்ளனர்.

click me!