மனுசனா இருக்கணும்னா முரசொலியை வாங்குங்க... ரஜினியை உசுப்பேற்றும் திமுக..!

By vinoth kumarFirst Published Jan 18, 2020, 12:44 PM IST
Highlights

துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. வரலாற்றை ரஜினிகாந்த் திரித்து கூறிவிட்டதாக குற்றம்சாட்டுகளும் எழுந்தன. 

முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட உடன்பிறப்பு என பொருள் என ரஜினிக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் பதிலடி கொடுத்துள்ளது.

துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுகவினர் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தன. வரலாற்றை ரஜினிகாந்த் திரித்து கூறிவிட்டதாக குற்றம்சாட்டுகளும் எழுந்தன. 

இந்நிலையில் இன்று வெளியான முரசொலி நாளிதழில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில், முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னதக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள். எல்லோர்க்கும் எல்லாம் என்ற சமத்துவ எண்ணம் கொண்டவன் என்று பொருள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்த குடியின் இன்றைய குடிமக்கள் என்று பொருள். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பவன் என்று பொருள்.

முரசொலி வைத்திருந்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்று பொருள். தன்னை ஒடுக்கியவர் யாரென்று உணரத் தொடங்கிவிட்டவன் என்று பொருள். இனியும் ஒடுங்க மறுப்பவன் என்று பொருள். ஒடுக்கியவர் திமிர் ஒடுங்க ஒன்று சேர்ப்பவன் என்று பொருள். எத்தனை மிக மிக என்றும் போட்டுக் கொள்ளுங்கள் என்று பொருள். மிக மிக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவன் என்று பொருள். தான் யாருக்கும் அடிமையில்லை. தனக்கும் யாரும் அடிமையில்லை என்பவன் என்று பொருள்.

முரசொலி வைத்திருந்தால் வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பவன் என்று பொருள். பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன் என பொருள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பவன் என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் தமிழ் காப்போன் என பொருள். தமிழர் நலன் காப்போன் என்று பொருள். தமிழ்நாடு காப்போன் என்று பொருள். வாழ்ந்த இனம், வீழ்ந்ததன் வரலாறும் வீழ்ந்த இனம் மீண்டும் வாழச் சரியான பாதையை தேர்ந்தெடுத்துவிட்டவன் என்று பொருள்.

யார் எதிரி, யார் நண்பன் என்பதை உணர்ந்து விட்டவன் என்று பொருள். எதிரிகளோடு எச்சூழலிலும் சமரசம் செய்து கொள்ளாதவன் என பொருள், முரசொலி வைத்திருந்தால் ஆண்டான், அடிமைக்கு எதிரானவன் என்று பொருள். சாதிச் சதியை எதிர்ப்பவன், மத மாச்சர்கயங்களை வெறுத்தவன் என்று பொருள். சாதி பேதம், மத பேதம் பார்க்காதவன் என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட உடன்பிறப்பு என பொருள். பெரியார் - அண்ணா - கலைஞர் வழியில் புதிய தமிழகம் படைக்கப் புறப்பட்ட ‘தளபதி’ என்று பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் ‘மனிதன்’ என்று பொருள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!